கொலை வழக்கு: சிறையில் இருந்து வெளியே வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து - காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
10 மாதங்களாக சிறையில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை செய்யப்படுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து, பாட்டியாலா மத்திய சிறையில் இருந்து இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு மே 20ஆம் தேதி முதல் சிறையில் உள்ளார் நவ்ஜோத் சிங் சித்து. 1988 ஆம் ஆண்டு நடந்த சாலை தகராறு வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
ஊடகத்தில் வெளியான செய்திப்படி, நவ்ஜோத் சிங் சித்து தனது நன்னடத்தைக்காக முன்கூட்டியே விடுவிக்கப்படுவார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். நவ்ஜோத் சிங் சித்துவின் மகன் கரண், சித்துவின் பாதுகாப்புக் குழுவினருடன், அவரை அழைத்துச் செல்ல பாட்டியாலா சிறைக்கு வந்துள்ளார்.
இன்று காலை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், “சர்தார் நவ்ஜோத் சிங் சித்து நாளை பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது. (சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது)" என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு மே 20ஆம் தேதி சித்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.
நவ்ஜோத் சித்துவை பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஹெச்.பி.எஸ் வர்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அவரது விடுதலை பஞ்சாப் காங்கிரஸுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நவ்ஜோத் சித்துவின் ஆதரவாளர்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நவ்தேஜ் சிங் சீமா கூறுகையில், நவ்ஜோத் சித்து விடுதலையான பிறகு அவரை சிறையில் இருந்து பாட்டியாலாவில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்வோம். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா மற்றும் கட்சித் தலைவர் லால் சிங் ஆகியோர் வெள்ளிக்கிழமை நவ்ஜோத் சித்துவை சிறையில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்