நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ.. நடனம் ஆடும் போது அப்படியே கீழே விழுந்து உயிரிழந்த நபர்..
நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத்தில் தாண்டியா நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க:மேட்டூரில் கூடுதல் தண்ணீர் திறப்பு.. கல்லணையில் அடித்து செல்லப்பட்ட 16 மாடுகள் - வைரல் வீடியோ
தாகோத் மாவட்டத்தில் உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இளைஞர் ஒருவர், மகிழ்ச்சியுடன் மற்ற இளைஞருடன் சேர்ந்த தாண்டியா நடனம் ஆடிக்கொண்டுருந்தார்.
அப்போது திடீரென்று அப்படியே தொப்பென்று கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றி இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:கொள்ளையனை தைரியமாக விரட்டியடித்த பெண் வங்கி மேலாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!