மேடையில் ஆடிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு.. சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்த நடன கலைஞர்.

மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போது நடன கலைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

Dancer died of heart attack while dancing on stage.

மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போது நடன கலைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியின்போது பார்வதி வேடமணிந்து நடனக் கலைஞர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த போது இந்த சோகம் நடந்துள்ளது.

இளம் தலைமுறையினரையும் அச்சுறுத்தும் காலனாக மாறி உள்ளது மாரடைப்பு, முன்பெல்லாம் 60 வயது கடந்த ரத்தக் கொதிப்பு, கடும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களையே மாரடைப்பு தாக்கும். ஆனால் சமீபகாலமாக பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும்  அபாயம்  ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட ஆந்திராவில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவமும் நடந்தது.

Dancer died of heart attack while dancing on stage.

இதையும் படியுங்கள்: விடிந்தால் திருமணம்.. ஓட்டம் பிடித்த மணப்பெண்.. நேரம் பார்த்து பழிதீர்க்க மாப்பிள்ளை வீட்டார்.. நடந்தது என்ன?

இந்நிலையில் ஜம்முவில் உள்ள கோதே என்ற கிராமத்தில் கணேஷ் உத்சவ்  என்ற விநாயகர் சதுர்த்திக்கான கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது அதில் 20 வயதேயான யோகேஷ் குப்தா என்ற நடனக் கலைஞர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது ஓம் நமச்சிவாயா என்ற பாடலுக்கு ராதை வேடமிட்டு அவர் மேடையில் சுற்றிச்சுற்றி நடனமாடினார், பலரும் அவரது நடனத்தை உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர், அப்போது திடீரென நடனக்கலைஞர் யோகேஷ் குப்தா மேடையில் தலைகுப்புற விழுந்தார்.

இதையும் படியுங்கள்: உடல் ரீதியா ஒன்னு சேர்ந்துட்டா, ஊரே நம்மள சேர்த்து வைக்கும்... வீட்டிற்கே போய் உல்லாசம் அனுபவித்த இளைஞன்.

பின்னர் அவர் கை கால்களை உதைத்தபடி கிடந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் இது நடனத்தின் ஒரு பகுதியென கவனக்குறைவாக இருந்தனர். ஒருபுறம் பாடல் ஓளித்துக் கொண்டிருக்க  மறுபுறம் மாரடைப்பால் யோகேஷ் துடித்துக் கொண்டிருந்தார். அந்தப் பாடலின் இறுதியில் சிவபெருமான் வேடமிட்ட கலைஞர் மோடைக்கு ஓடிவந்து மயங்கிக் கிடந்த யோகேஷ் குப்தாவை தூக்க முயன்றார், ஆனால் அவரால் அது முடியவில்லை, பின்னர் அவருக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்த அங்கிருந்தவர்கள், நடன கலைஞரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

Dancer died of heart attack while dancing on stage.

அப்போது தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது, நடன கலைஞர் மேடையில் மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios