நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு.. மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த 21 வயது இளைஞர்.!

கார்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த போது 21 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
Youth dies of heart attack dancing Garba

கார்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த போது 21 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய நடனமான கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

Youth dies of heart attack dancing Garba

அங்கு,  விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டதும் சக நண்பர்கள் கதறி அழுதனர். 21 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios