கொள்ளையனை தைரியமாக விரட்டியடித்த பெண் வங்கி மேலாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
ராஜஸ்தானில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை பெண் வங்கி மேலாளர் ஒருவர் தைரியமாக எதிர்க்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தானில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை பெண் வங்கி மேலாளர் ஒருவர் தைரியமாக எதிர்க்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், ஜவஹர் நகர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ராஜஸ்தான் மருதரா கிராமின் வங்கிக்குள் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து கத்தி முனையில் அங்கு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர்கள் அந்த கொள்ளையனை தடுக்க முயன்றனர்.
இதையும் படிங்க: அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அப்போது வங்கியின் கிளை மேலாளர் பூனம் குப்தா, கத்தியுடன் மிரட்டி வந்த அந்த கொள்ளையனுடன் கத்திரிகோலை வைத்துக்கொண்டு சண்டையிட்டார். இதுத்தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில், மர்ம நபர் தன்னுடன் ஒரு பை மற்றும் பெரிய கத்தியை கொண்டு வந்ததைக் காணலாம். அதே சமயம் முகத்தை முழுவதுமாக துணியால் மூடியிருந்தார்.
இதையும் படிங்க: குழந்தை பெற்றுக்கொள்ள கணவனை வெளிய விடுங்க.. கதறிய மனைவி.. பாலியல் கைதியை பரோலில் விட்ட நீதிமன்றம்.
வங்கிக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, வங்கி ஊழியர்களிடம் இருந்து மொபைலை பறித்த போது, வங்கி மேலாளர் பூனம் குப்தா, துணிச்சலுடன் கத்தரிக்கோலால் மர்ம நபரை தாக்கினார். அப்போது, ஆத்திரமடைந்த மர்மநபர் பதில் தாக்குதல் நடத்த முயன்றார். இதை அடுத்து வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, மர்ம நபரை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட மர்ம நபர் போலீஸாரிடம் ஒப்பைக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீகங்காநகர் போலீசார், மர்மநபரிடம் விசாரணை நடத்தினர். அதில், கைது செய்யப்பட்ட நபர் 29 வயதான லாவிஷ் எனப்படும் திசு என அடையாளம் காணப்பட்டுள்ளது.