இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேசத்தில் லித்தியம் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேசத்தில் லித்தியம் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த லித்தியம் தாதுக்கள் 59 லட்சம் டன்வரை பூமிக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மின்னனு வாகனங்களுக்கு பேட்டரி தயாரிப்பில் பிரதான பொருளாதார லித்தியம் பயன்படுகிறது. தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்துதான் இந்தியா லித்தியம் தாதுக்களை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுரங்கம் மற்றும் வளங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் சலால் ஹெய்மானா எனும்பகுதியில் முதல்முறையாக லித்தியம் தாதுக்களை இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. பூமிக்கு அடியில் 59 லட்சம் டன் வரை லித்தியம் இருக்கலாம் எனத் தெரிகிறது.
எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
லித்தியம் உள்ளிட்ட தங்கம் இருக்கும் 51 இடங்களைக் கண்டறிந்து அவை குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 51 தாதுக்கள் சுரங்கத்தில், 5 சுரங்கங்களில் தங்கம் இருக்கிறது, மற்ற சுரங்கங்களில் பொட்டாசியம், மாலிப்டேனம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் தமிழகம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இந்த 51 சுரங்கங்கள் உள்ளன.
கடந்த 2018-19ம் ஆண்டிலிருந்து இந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இப்போதுவரை விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நிலக்கரி மற்றும் லிக்னைட் தாதுக்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 7897 மில்லியன் டன்நிலக்கரி தாதுக்கள் இருக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுரங்க மற்றும் வளங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம்(GSI) கடந்த 1851ம் ஆண்டு ரயில்வே துறைக்கு நிலக்கரி தேவைக்காக, நிலக்கரி கண்டுபிடிப்புக்காக உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த நிறுவனம் வெறும் புவியியல் அமைப்பாக இல்லாமல், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற புவிஅறிவியல் சார்ந்த அமைப்பாக வளர்ந்து அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஹிண்டன்ப்ர்க் நிறுவன அறிக்கை மீது விசாரணை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை
இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி என்பது நிலத்துக்கு அடியில் இருக்கும் வளங்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளன ஆகியவற்றைக் கண்டறிந்து அரசுக்கு அனுப்புவதாகும். வான்வெளி சர்வே, கடல்வழி சர்வே, வளங்கள் குறித்தசர்வே, சுற்றுச்சூழல் சர்வே, பேரிடர்கள் குறித்த ஆய்வுகள், முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல், நிலநடுக்கம் குறித்த ஆய்வுகள் போன்றவற்றை இந்திய புவிவியல் அமைப்பு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
