LPG Price: எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும் என்பதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும் என்பதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
வீடுகளில் மக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலை ஏன் குறைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு மக்களவையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி இன்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை, கச்சா எண்ணெய்விலையை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நான் படித்த ஆய்வு ஒன்றில், இப்போது இருக்கும் சூழல் எல்லாம் கடந்து, அதிக அளவு எரிவாயு கிடைக்கும். ஆனால், இன்று இருக்கும் சர்வதேச சூழலை அனுசரி்த்துதான் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டியதிருக்கும்.
12 நகரங்களில் QR கோட் முறையில் நாணயங்கள் வழங்கும் எந்திரம்: ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு
மத்திய அரசு மக்களின் தேவைகளில் கண்ணும் கருத்தாகஇருக்கிறது, குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் தேவையில் கவனமாக இருக்கிறது. நாங்கள் இதுவரை சர்வதேச சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், வீடுகளில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்த அனுமதிக்கவில்லை.
சவுதிஅரேபியாவின் ஒப்பந்தவிலை 330 சதவீதம் உயர்ந்தபோதிலும், உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலையை குறைந்த அளவே உயர்த்தியுள்ளோம்.
சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா ஒப்பந்தவிலை மெட்ரிக் டன் 750 டாலருக்குக் குறைவாக வந்தால், வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரை மலிவாக வழங்க முடியும்.
இவ்வாறு ஹர்தீப் பூரி தெரிவித்தார்.
அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு
இந்தியாவைப் பொறுத்தவரை சமையல் எரிவாயுவில் 60 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.
வீடுகளி்ல் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. அதன்பின் விலை மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை ரூ.1053க்கு விற்கப்படுகிறது.