மத்திய பிரதேச சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர்  இருப்பவர் ராம்பால் சிங் மகன் கிரிஜேஷ்க்கும் பிரீத்திக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் போபாலில் உள்ள ஆரிய சமாஜ கோவிலில் திருமணம் நடந்தது.

கடந்த சில மாதங்களாக பிரீத்தி, ரைசன் மாவட்டத்தின் உதய்புராவில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கிரிஜேஷூக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையறிந்தது முதலே பிரீத்தி மிகவும்  மனவுளைச்சலில் இருந்துள்ளார். கணவர் 2-வது திருமணத்துக்கு முயன்று வரும் சம்பவத்தால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது இறப்புக்குமுன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்த பிரீத்தி, அதில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், பிரீத்தியின் உடலுக்கு கிரிஜேஷ்தான் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் உதய்புரா மற்றும் ரைசன் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

ஆபாச படம் காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சஞ்சய் படேல் என்பவர் இசைப்பள்ளி நடத்தி வந்தார். அவரது வகுப்பில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர். மேலும், அவர் விரிந்தவான் பகுதியில் உள்ள இசை வகுப்பில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சஞ்சய் வகுப்பில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி சிறுமி(6) ஒருவர் சேர்ந்துள்ளார்.

அவள் சேர்ந்த 4 வது நாள் வகுப்பு முடிந்த பின்னர் தனது பெற்றோர் வருகைக்காக காத்திருந்தாள். அப்போது அங்கு வந்த சஞ்சய் சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டியுள்ளார். மேலும், அவளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

இதையடுத்து, சஞ்சய் படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களது வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எஸ். பாய்சரே அளித்த தீர்ப்பில்,'சஞ்சய் மீதான அனைத்து குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

வீடியோ கேம் விளையாட விடாத அக்காவை கொன்ற தம்பி!

வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.நேற்று மதியம் டிஜோனே ஒயிட் என்பவர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.