கர்நாடக அரசின் இந்து திருமணச் சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ..

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் திருமணங்களை ஆன்லைன் பதிவு செய்யும் வசதியை கர்நாடக அரசு அறிமுகம் செய்துள்ளது.

How to apply for an Aadhaar-verified Karnataka Hindu marriage certificate Rya

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் திருமணங்களை ஆன்லைன் பதிவு செய்யும் வசதியை கர்நாடக அரசு அறிமுகம் செய்துள்ளது. பதிவு செயல்முறையை சீரமைக்கவும், விண்ணப்பதாரர்களின் சுமையை குறைக்கவும்,  இந்து திருமண பதிவு செயல்முறையை நவீனமயமாக்கும் நோக்கத்திலும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கர்நாடகாவில் சுமார் 30 சதவீதம் மட்டுமே இந்த திருமண சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து  பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இந்த ஆன்லைன் பதிவு வசதியை கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கவுடா, இந்த புதிய அமைப்பு வழங்கும் வசதியை எடுத்துரைத்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய தனிநபர்கள் இனி துணைப் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

கர்நாடகா பட்ஜெட்டில் மேகதாது அணைக்கு முக்கியத்துவம்; விரைவில் அனுமதி என சித்தராமையா அதிரடி!!

ஆஃப்லைனில் பதிவு செய்ய விரும்பும் அல்லது ஆதார் அங்கீகாரத்தை வழங்க விரும்பாத நபர்களுக்கு, துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான விருப்பம் கிடைக்கும் என்றும் கூறினார்.

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுகளை எளிதாக்குவதுடன், 1954 இன் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வரும் திருமணங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதிவுத் திருமணம் செய்ய விரும்புவோருக்கு இந்த விருப்பத்தை பயன்படுத்த முடியாது. 

சக்கர நாற்காலி பற்றக்குறை.. விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கர்நாடகாவில் இந்து திருமணச் சான்றிதழுக்காக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

காவேரி 2.0 இணையதளத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய, விண்ணப்பதாரர்கள்  marriage registration என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் அட்டை, மூன்று சாட்சிகளின் விவரங்கள், திருமணச் சான்றாக திருமண அழைப்பிதழ் மற்றும் வயது சரிபார்ப்புக்கான உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். விண்ணப்பம், துணைப் பதிவாளரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அவர் சான்றிதழில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். தற்போது மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவு முறை சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios