சக்கர நாற்காலி பற்றக்குறை.. விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு..
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் தனது மனைவியுடன் வந்த 80 வயது முதியவர் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் தம்பதியினர் சக்கர நாற்காலிகளை முன்பதிவு செய்திருந்தனர், ஆனால் அவரின் மனைவிக்கு மட்டுமே சக்கர நாற்காலி கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த முதியவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார. விமானத்தில் இருந்து இமிகிரேஷன் கவுண்டர் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து சென்ற நிலையில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்துள்ளார்.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிப்ரவரி 12 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்த எங்கள் விருந்தினர்களில் ஒருவர் உயிரிழந்தார்.. சக்கர நாற்காலிகளுக்கு அதிக தேவை இருந்ததால், அவர்களுக்கு சக்கர நாற்காலி உதவியும் வழங்கப்படும் வரை காத்திருக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம், ஆனால் அந்த முதியவர் தனது மனைவியுடன் நடக்க விரும்பிய அவர் நடந்து சென்ற போது மயங்கி விழுங்கினார். விமான நிலைய மருத்துவரின் ஆலோசனையின்படி, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், பயணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.
இன்று விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்.. வங்கிகள், அலுவலகங்கள் மூடப்படுமா?
சக்கர நாற்காலி பற்றாக்குறை
உயிரிழந்த முதியவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் AI-116 இல் பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 32 சக்கர நாற்காலி பயணிகள் இருந்தனர், ஆனால் 15 சக்கர நாற்காலிகள் மட்டுமே இருந்தது என்றும் கூறப்படுகிறது. சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாகவே முதியவர் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க ஏர் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், கொல்கத்தாவில் விமான நிலைய ஊழியர்கள் சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்கச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
அவரின் பதிவில் “ நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு அனுமதியின் போது, அதிகாரி என்னை (சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்) எழுந்து நிற்க சொன்னார். ஒருமுறை அல்ல மூன்று முறை எழுந்து நிற்கச் சொன்னார். நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் முடியாது என்று கூறினேன். ஆனால் மீண்டும் என்னை நிற்கச் சொன்னார். தயவுசெய்து இரண்டு நிமிடங்கள் நிற்கவும் என்று தெரிவித்தார்.. நான் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளி என்பதை மீண்டும் விளக்கினேன். எனினும் அவர்களிடம் இரக்கம், கருணை இல்லாதது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, கோபமாக இருக்கிறது. கடந்த காலங்களிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால்அவர்களிடமிருந்து கொல்கத்தா விமான நிலையம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.” என்று கூறியிருந்தார்.