இன்று விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்.. வங்கிகள், அலுவலகங்கள் மூடப்படுமா?

தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இன்று நாடு தழுவிய பாரத் பந்த்-ஐ விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

Bharat bandh today: Are banks, offices closed? Top updates on farmers' nationwide protest Rya

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலுயுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் இதர விவசாயிகள் குழுக்கள் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பஞ்சாப் ஹரியானாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினர். ஆனால் அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். 

இதனால் டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசார் ஒன்று திரண்டுள்ளனர். ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைக்க போலீசார் முயன்றனர். இதனால் போலீசார் விவசாயிகள் இடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பதற்றத்தை தணிக்க விவசாயிகள் கூடியிருக்கும் பாட்டியாலா, சங்ரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

தேர்தல் பத்திரம்.. ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - சமூக வலைதளங்களில் மக்கள் கூறும் கருத்துக்கள் என்ன?

இதனிடையே விவசாய சங்கத்தினருடம் மத்திய அரசு கடந்த 8, 12 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் போராட்டத்தை தொடர விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் நாடு தழுவிய பாரத் பந்துக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து விவசாய சங்கங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இன்று காலை 6 முதல் மாலை 4 மணி வரை இந்த பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, விவசாய நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MNREGA) ஊரகப் பணிகள், தனியார் அலுவலகங்கள், கிராமக் கடைகள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மற்றும் சேவைத் துறை நிறுவனங்களின் பணிகள் இன்று பாதிப்பாடும். ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி: ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டி - ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு!

எனினும் இந்த பந்த் காரணமாக பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கடைகள் நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் செயல்பாடுகள், செய்தித்தாள் விநியோகம், திருமணம், மருத்துவக் கடைகள், பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் போன்ற அவசர சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது.

டெல்லியில் போராட்டகாரர்களை கலைக்க ஏராளமான கண்ணீர் புகை குண்டுகளை டெல்லி போலீசார் இருப்பில் வைத்துள்ளனர். மேலும் மத்திய பிரதேசம் குவாலியரில் இருந்து மேலும் 30,000 புகை குண்டுகளை போலீசார் வாங்க உள்ளனர். 

இதனிடையே விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வெழுதும் மாணவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணித்து முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios