ஜி20 தொற்றுநோய் நிதியம் விலங்குகள் மூலம் பரவும் நோய்பரவலைத் தடுக்கவும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு 25 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளது.
ஜி20 தொற்றுநோய் நிதியம், "தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் இந்தியாவில் விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்துக்கு 25 மில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சமீப காலத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்த 6 சர்வதேச சுகாதார அவசரநிலை காலங்களில் 5 விலங்கினங்கள் தொடர்பானவை. இதனால் உலகம் முழுவதும் எந்தவிதமான தொற்றுநோயையும் எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. இது விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதை மையமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தோனேசியா தலைமை வகித்தபோது தொற்றுநோய் நிதியம் நிறுவப்பட்டது. இதன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுகாதார ஆயத்த நிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான முதலீடுகளுக்கு நிதி அளிக்கப்பட்டது.

இந்த தொற்றுநோய் நிதியம் தற்போது இந்தியாவின் மானியக் கோரிக்கையை ஏற்று 25 மில்லியன் டாலர் நிதியை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. மொத்தம் 338 மில்லியன் டாலர் மட்டுமே வழங்கப்பட இருக்கும் நிலையில் 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு மானியக் கோரிக்கைள் வந்ததாக தொற்றுநோய் நிதியம் கூறியது.
2023ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஆறு பிராந்தியங்களில் 37 நாடுகளில் எதிர்கால தொற்றுநோய்களுக்கு பின்னடைவை அதிகரிக்கும் நோக்கில், அதன் முதல் சுற்று நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 19 மானியங்களை தொற்றுநோய் நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது.
நோய் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பை வலுப்படுத்துதல், ஆய்வகங்களை விரிவுபடுத்துதல், தரவு அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் இடர் பகுப்பாய்வு திறனை உருவாக்குதல், சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு ஆகியவை இந்த நிதியம் வலியுறுத்தும் முக்கிய பணிகள் ஆகும்.
ஜி20 தொற்றுநோய் நிதியம் மானியம் அளிப்பதன் நோக்கம் நோய்க்கிருமிகள் விலங்குகளிடமிருந்து (வளர்ப்பு மற்றும் வனவிலங்குகள்) நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்தது ஏன்? கர்நாடகாவில் காங். அரசைக் கண்டித்து பாஜக போராட்டம்
