Asianet News TamilAsianet News Tamil

Amritpal Singh: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் அதிரடி கைது.!

காவல்துறையிடம் இருந்து தப்பியோடிய அம்ரித்பால் சிங் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Fugitive Amritpal Singh arrested by Punjab's Moga Police
Author
First Published Apr 23, 2023, 7:33 AM IST

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக கொண்டு சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக இருந்து வரும் நபர் அம்ரித்பால் சிங். 

கடந்த மாதம் இவரது ஆதரவாளர்கள் சிலர் ஆள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அம்ரித்பால் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த சூறையாடி தனது ஆதரவாளர்களை வெளியே கொண்டு வந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Fugitive Amritpal Singh arrested by Punjab's Moga Police

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

அம்ரித்பாலை கைது செய்து நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை கடந்த மார்ச் 18ஆம் தேதி களமிறங்கியது. ஆனால் அம்ரித்பால் தலைமறைவானார். அம்ரித்பாலின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் 'வாரிஸ் பஞ்சாப் டி'அமைப்பை சேர்ந்த பலரை போலீசார் கைது செய்தனர்.

அம்ரித் பால் சிங் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் நடமாடும் வீடியோக்கள் பல வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தப்பியோடிய அம்ரித்பால் சிங் மேகாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒரு மாத தலைமறைவிற்கு பிறகு அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!

Follow Us:
Download App:
  • android
  • ios