லண்டனில் ரூ.10 கோடி மதிப்பில் ஆடம்பர வீடு.. இந்த பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1400 கோடி..
தெற்கு கோவாவின் பாஜக வேட்பாளரான பல்லவி டெம்போ, தனக்கு ரூ.1400 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல், அனல் பறக்கும் பிரச்சாரம் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் அவர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகி உள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்.. தெற்கு கோவாவின் பாஜக வேட்பாளரான பல்லவி டெம்போ, தனக்கு ரூ.1400 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கோவாவில் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..
பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது - ராகுல் காந்தி கணிப்பு!
தெற்கு கோவா தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி டெம்போ என்ற பெண் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து மதிப்பு குறித்த 119 பக்க பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கும் தனது கணவர் ஸ்ரீநிவாவாஸின் சொத்து மதிப்பு ரூ.1400 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு ரூ. 255.44 கோடியும், தனது கணவர் ஸ்ரீனிவாஸுக்கு ரூ. 998.83 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிடுள்ளார்.
பல்லவியின் அசையா சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.28.2 கோடி, ஸ்ரீனிவாஸின் மொத்த சந்தை மதிப்பு ரூ.83.2 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். கோவாவை தவிர நாட்டின் பிற பகுதிகளிலும், டெம்போ தம்பதிக்கு சொத்து உள்ளது. மேலும் இந்த தம்பதி துபாயில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் வைத்துள்ளனர், அதன்தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2.5 கோடி என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் லண்டனில் ரூ.10 மோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பல ஆடம்பர கார்களும், ரூ.5.7 கோடி மதிப்புள்ள தங்கம் தன்னிடம் இருப்பதாகவும் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டுவோம்: பிரதமர் மோடி பேச்சுக்கு அமெரிக்கா கருத்து!
பல்லவி 2022-23 நிதியாண்டில் ரூ.10 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீனிவாஸ் அதே ஆண்டு ரூ.11 கோடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளார் என்று அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதாகும் பல்லவி டெம்போ, புனே பல்கலைக்கழகத்தின் எம்ஐடியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அரசியல்வாதியான பல்லவி, டெம்போ குழுமத்தின் தலைவரான ஸ்ரீனிவாஸ் டெம்போவை மணந்தார், டெம்போ குழுமம் கால்பந்து முதல் ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுதல், கல்வி, சுரங்கம் வரையிலான பல தொழில்களை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2024 lok sabha election
- 2024 lok sabha elections
- BJP
- Dubai
- London
- Pallavi Dempo
- Shrinivas Dempo
- apartments
- assets
- bjp candidate pallavi dempo networth
- election 2024
- lok sabha election
- lok sabha election 2024
- lok sabha election 2024 opinion poll
- lok sabha elections
- lok sabha elections 2024
- loksabha election 2024
- loksabha elections 2024
- luxury cars
- net worth
- pallavi dempo networth