ஹனுமான் வேடத்தில் நாடகத்தில் நடிக்கும் போதே இறந்த துயர சம்பவம் - வைரல் வீடியோ !
ஹனுமான் வேடத்தில் நடித்தவர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் ராம்லீலாவில் ஹனுமான் வேடத்தில் நடித்த 50 வயது முதியவர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் ராம்லீலா நாடகம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்
ஹனுமானின் வால் எரிக்கப்பட்ட உடனேயே, அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராம் ஸ்வரூப், தரையில் சரிந்து ஒரு நிமிடத்தில் இறந்துவிட்டார். இந்த சம்பவம் நடந்தபோது ராம் ஸ்வரூப்பின் மனைவி அனுசுயா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர். அவரது மனைவியும், இரண்டு வயது மகள் ரூபாவும் அருகில் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
இதுகுறித்து பேசிய கிராமத் தலைவர் குலாப், ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் குடும்பத்தினர் சடலத்தின் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்’ என்று கூறினார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க..ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!