Explained: BBC Ban:பிபிசி சேனல் இதற்கு முன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? காங்கிரஸ் கதறுவது நியாயமா?

2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் வெளியிட்ட ஆவணப்படத்துக்குப்பின் அந்தச் சேனலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினர் மத்தியில் வலுத்துள்ளது.
 

Explained : Has Indian Government ever banned the BBC channel?

2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் வெளியிட்ட ஆவணப்படத்துக்குப்பின் அந்தச் சேனலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினர் மத்தியில் வலுத்துள்ளது.

ஏன் தடை?
2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்கள் இருப்பதாகவும், அவரின் மரியாதையைக் குலைக்கும் விதத்தில் இருப்பதாகவும் கூறிய மத்திய வெளியுறவுத்துறை , தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதித்தது. 

டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு 2வது நாளாகத் தொடர்கிறது

தடைக்கு எதிர்ப்பு

இந்தத் தடைக்கு எதிராக இடதுசாரி அமைப்பினர், காங்கிரஸ் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி ஆவணப்படம் மாணவர்களால் திரையிடப்பட்டது. மத்திய அ ரசு விதித்துள்ள தடைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

Explained : Has Indian Government ever banned the BBC channel?

பிபிசிக்கு தடை

பிபிசிக்கு ஆதரவாகவும், ஆவணப்படத்துக்கான தடையை விலக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடி வரும்நிலையில் பிபிசி சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பில் குரல் வலுத்து வருகிறது. இந்தியாவில் இதற்கு முன்  பிபிசி சேனல் தடை செய்யப்பட்டதுபோல் இப்போதும் தடை செய்யப்பட வேண்டும் என்று பாஜகவினர் ஆவேசமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

பிபிசிக்கு தடை விதிக்கப்பட்டதா

ஆம், கடந்த 1970களில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் பிபிசி சேனலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகள் அமலில்இருந்த தடை பின்னர் நீக்கப்பட்டது

உலகிலேயே ஊழல் நிறைந்தது பிபிசி! இந்தியாவைப் பற்றி நச்சு அறிக்கை! பாஜக பாய்ச்சல்

பிபிசிக்கு தடை ஏன்

கொல்கத்தாவில் இருந்த பிபிசி அலுவலகம் சார்பி்ல கடந்த 1968ம் ஆண்டு கொல்கத்தா குறித்து ஆவணப்படம் தயாரித்தது. இந்த ஆவணப்படத்தை பிரான்ஸ் இயக்குநர் லூயிஸ் மாலே இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 1968 முதல் 1969ல் கொல்கத்தா குறித்து இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய நகரம், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் 2வது பெரியநகரம், பன்முக கலாச்சாரங்கள் செழுமி இருக்கும் நகரம் என்றெல்லாம் கொல்கத்தாவுக்கு சிறப்பு இருந்தது.

Explained : Has Indian Government ever banned the BBC channel?

இந்தத் திரைப்படத்துக்காக கடந்த 1967ம் ஆண்டு கொல்கத்தா வந்து சுற்றுப்பார்த்துச் சென்ற இயக்குநர் மாலே, தன்னுடைய கேமராவில் கொல்கத்தாவின் அவலங்களை , மறைந்து கிடக்கும் விஷயங்களை சாலைகளிலும், தெருக்களிலும் மக்களின் வசிக்கும் நிலை குறித்து 1968ல் படம் பிடித்தார்.கொல்கத்தாவில் குடிசைவாழ் மக்கள், சாலைஓர வசிக்கும் மக்கள் மீது இயக்குநர் மாலேவின் கவனம் அதிகம்இருந்தது.

இதனால் கொல்கத்தாவில் உழைக்கும் வர்க்கத்தினர் மீது கவனம் செலுத்துவதைவிட, வறுமை, ஏழ்மை மீது மாலேயின் கேமிரா கோணம் பதிந்தது. இது உலகளவில் இந்தியாவின் நிலையை மோசமாகவும், தவறாகவும், ஏழ்மை நாடாகவும் சித்தரித்தது.

இந்த ஆவணப்படம் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. அவர் இந்த ஆவணப்படத்தால் அமைதியற்று இருந்தார்

டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

Explained : Has Indian Government ever banned the BBC channel?

பிபிசிக்கு நோட்டீஸ்

இதையடுத்து, பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் குறித்து இந்திய தூதரகத்துக்கு பலபுகார்கள் வந்தன. இந்தியாவுக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது, இந்தியாவின் தோற்றத்தை சிதைக்கும் வகையில் இருக்கிறது என்று புகார்கள் வந்தன.

ஆனால், பிபிசி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட இந்தியத் தூரகத்தால் முடியவில்லை. இதையடுத்து, பிபிசியிடம் பேசிய இந்தியத் தூதரகம், பிபிசி ஒளிபரப்பில் இருந்து இந்தியா குறித்த ஆவணப்படத்தை நீக்குமாறு கோரியது. இந்தியாவுக்கும், மக்களுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, ஆதிக்கமனப்பான்மையுடன் இருப்பது சரியல்ல எனஎச்சரித்தது.

பிபிசி-சேனலுக்கு தடை

1970 ஆகஸ்ட் 29ம் தேதி, பிபிசி-சேனலுக்கு இந்தியாவில் தடை விதித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திடீரென உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் உள்ள பிபிசி-சேனலின் பிரதிநிதி மார்க் டுலே, செய்தியாளர் ரூனி ராப்சன் இருவரிடமும் இந்திய அரசின்முடிவைத் தெரிவித்து, அடுத்த 15 நாட்களில் பிபிசி அலுவலகத்தை மூட வேண்டும் என்று காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.

Explained : Has Indian Government ever banned the BBC channel?

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பும் பிபிசி சேனல் இந்தியா குறித்த பாரபட்சமான செய்திகள், தவறாக, குறைத்து மதிப்பிடும் கருத்துக்கள், படங்களை வெளியிட்டு வந்தது. இது அப்போது இருந்த மத்திய அரசுக்கு நெருடலை அளித்துவந்தாலும், இந்திரா காந்தி தலைமையின் போது உச்சத்தை அடைந்ததால் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் பிபிசி

கடந்த 1971ம் ஆண்டின் கடைசியில் பிபிசி சேனல் வங்கப் போரில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தியா வந்தது. இருப்பினும் 1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை கொண்டுவந்தபோது, பிபிசி தன்னை ஆழமாக நிலைநிறுத்த முயன்றது. ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 41 எம்.பி.க்கள் பிபிசி சேனலை இந்திய மண்ணில் செயல்பிடவிடக்கூடாது என்று கடிதம் எழுதினர். இந்தியாவை தவறாக சித்தரிக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பிபிசி தவறவிட்டதில்லை என்று எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்! ஆண்டுதோறும் 120 டன்! மின்னுவெதெல்லாம் நல்ல தங்கமா?

Explained : Has Indian Government ever banned the BBC channel?

கடந்த 1970களில் பிபிசி-சேனலை இந்திரா காந்திதான் தடை செய்தார். அப்போது பிபிசி சேனல் மீதான தடை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டது காங்கிரஸ் கட்சிதான். இப்போது, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டநிலையில், பிபிசி சேனலுக்கு ஆதரவாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios