Explained: Gold Smugling:அதிகரிக்கும் தங்கக் கடத்தல்! ஆண்டுதோறும் 120 டன்! மின்னுவெதெல்லாம் நல்ல தங்கமா?

தங்கக் கடத்தல் தொட்ந்து அதிகரி்த்து வருகிறது. கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 100 டன் முதல் 120 டன் தங்கம் கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு பிடிபட்டுள்ளது

Rising smuggling of gold! 120 tonnes yearly! Examining the alarming rise of illegal gold in recent years

தங்கக் கடத்தல் தொட்ந்து அதிகரி்த்து வருகிறது. கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 100 டன் முதல் 120 டன் தங்கம் கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு பிடிபட்டுள்ளது

உலகளவில் இந்தியா தங்கத்துக்கான மிகப்பெரிய சந்தை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் தங்கம் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை விரிவடைவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று தங்கம் இறக்குமதிதான். அந்நியச் செலாவணியில் பெரும்பகுதி கச்சா எண்ணெய்க்கு அடுத்தார்போல் தங்கம் வாங்கத்தான் மத்திய அரசு செலவிடுகிறது.

நாக்பூரிலிருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமா? உண்மை என்ன?

Rising smuggling of gold! 120 tonnes yearly! Examining the alarming rise of illegal gold in recent years

உணர்வோடு உறவாடும் தங்கம்

தங்கம், இந்தியர்களின் வாழ்வோடும், உணர்ச்சிகளோடும் கலந்துள்ளது. எந்த நல்ல நாட்களும், விஷேங்களும் தங்கம் இல்லாமல் நிறைவடைவதில்லை. அதனால்தான் இந்தியாவில் உள்ள தங்கநகைச் சந்தையில் பெரும்பகுதி, திருமணம் தொடர்பான ஆபரணங்களாக ஆக்கிரமித்துள்ளன. ஆனால், நாம் வாங்கும் ஆபரணங்கள் சுத்தமான இறக்குமதி செய்யப்பட்டதங்கத்தால் செய்யப்பட்டதா அல்லது கடத்தல் தங்கத்தால் செய்யப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது.

ஏனென்றால், ஆண்டுதோறும் அதிகரித்துவரும் தங்கக் கடத்தல் அந்த கேள்விகளை எழுப்புகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 120 டன் தங்கம் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஆண்டு தங்கத் தேவையில் 17 சதவீதமாகும் என்று வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

GATE தகுதித் தேர்வு ‘ரெஸ்பான்ஸ் ஷீட்’ இன்று வெளியீடு: எப்படி சரிபார்க்கலாம்

கடத்தல்

கடந்த 2015ல் 119 டன், 2016ல் 116 டன், 2017ல் 105 டன், 2018ல் 100 டன் தங்கம், 2019ல் 117 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.

Rising smuggling of gold! 120 tonnes yearly! Examining the alarming rise of illegal gold in recent years

மத்திய வருவாய் புலனாய்வு தகவலின்படி, கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டுவரை இந்தியாவுக்குள் ஆண்டுதோறும் 100 முதல் 120 டன்தங்கம் வரை கடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் கொரோனா தொற்று காலமும் விதிவிலக்கு அல்ல. கடுமையான லாக்டவுன் இருந்தபோதும்கூட, தங்கக் கடத்தல் நடந்து ஏராளமான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், இந்த கடத்தல் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வந்தபின் கடுமையாக அதிகரித்துள்ளது.

கொரோனா காலம்

வருவாய்புலனாய்வு பிரிவு கூறுகையில் “ கொரோனா காலத்தைவிட, அதன்பின் பொருளாதாரம் இயல்புக்கு வந்தபின் தங்கக் கடத்தல் வெகுவாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவி்த்துள்ளனர்.

தங்கக் கட்டுப்பாடு கடந்த 1960 முதல் 1990வரை இருந்தபோதுதான் தங்கக் கடத்தல் அதிகரித்தது. அதன்பின் தங்கக் கட்டுப்பாடு நீக்கப்பட்டபின், சட்டவிரோதமாக கொண்டுவருவது குறைந்துவிட்டதே தவிர முழுமையாக நீக்கப்படவில்லை. 2012ம் ஆண்டில் தங்க இறக்குமதி உயர்த்தப்பட்டபின், தங்கக் கடத்தல் மீண்டும் துளிர்விட்டு மூச்சுவிடத் தொடங்கியது என்று உலகக் தங்கக் கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு 2வது நாளாகத் தொடர்கிறது

Rising smuggling of gold! 120 tonnes yearly! Examining the alarming rise of illegal gold in recent years

சுங்க வரி உயர்வு

2012ம் ஆண்டிலிருந்து தங்கம் இறக்குமதிக்கு வரி அதிகரித்துவருகிறது, அது முதல் தங்கக் கடத்தல் இந்தியாவுக்கு அதிகரித்து வருகிறது, இறக்குமதி வரி உயர்வு தங்கக் கடத்தலுக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. 2012ல் 2.1 சதவீதம் இருந்த இறக்குமதி வரி, 2013ல் 10.30 சதவீதமாகவும், 2022ல் 15 சதவீதமாகவும் உயர்ந்தது.

அதிகமான சுங்கவரிவிதிப்புதான் தங்கக் கடத்தை ஊக்குவிக்கிறது, இந்தக் கடத்தலை நிர்வாகத் தோல்வியால் தடுத்துநிறுத்து முடியவில்லை, முற்றுப்புள்ளி வைக்கவும் முடியவில்லை.

2022, ஜூலை1ம் தேதி தங்கத்துக்கான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. தங்கம் இறக்குமதி நடப்புக் கணக்குப்பற்றாக்குறையில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தங்கம் இறக்குமதியைக் குறைக்க வரியை 15 சதவீதமாக அரசு உயர்த்தியது. 

Rising smuggling of gold! 120 tonnes yearly! Examining the alarming rise of illegal gold in recent years

வாய்ப்பு அதிகரிப்பு

ஆனால், தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்வு என்பது தற்காலிகமான நடவடிக்கைதான். வர்த்தகச் சமநிலை ஏற்பட்டவுடன், வரி குறைப்பு வந்துவிடும். 2023-24பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறையும் என வர்த்தகர்கள் எதிர்பார்த்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இது தங்கக் கடத்தலுக்கான கதவுகளை இன்னும் அகலமாகத் திறந்துவிட்டிருக்கிறது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios