BBC:BJP:உலகிலேயே ஊழல் நிறைந்தது பிபிசி! இந்தியாவைப் பற்றி நச்சு அறிக்கை! பாஜக பாய்ச்சல்

இ்ந்தியாவுக்கு எதிராக விஷத்தனமான அறிக்கையை பிபிசி சேனல் வெளியிட்டுள்ளது, பிபிசி-யின் பிரச்சாரமும், காங்கிரஸின் திட்டமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்று பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.

BJP blasts the BBC for its "venomous" portrayal on India.

இ்ந்தியாவுக்கு எதிராக விஷத்தனமான அறிக்கையை பிபிசி சேனல் வெளியிட்டுள்ளது, பிபிசி-யின் பிரச்சாரமும், காங்கிரஸின் திட்டமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்று பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி சேனல் வெளியிட்டது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசுதடை விதித்து. இந்தத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரிக்கப்பட்டு வருகின்றன 

BJP blasts the BBC for its "venomous" portrayal on India.

இந்நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சர்வே செய்தனர். சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் சர்வே நடத்தப்பட்டது. இதற்கு பெயர் ரெய்டோ, சோதனையோ அல்ல. இதற்கு பெயர் சர்வே என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

இந்தச் சூழலில் பிபிசி-சேனலுக்கு எதிராக பாஜக வரிந்துக் கட்டி களமிறங்கியது. பாஜக தேசியச் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சிப்பது சரியல்ல. அரசு அதிகாரிகளை அவர்களின் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசிதான்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பிபிசி சேனலை தடை செய்தார் என்பதை காங்கிரஸ் கட்சி நினைவில் கொள்ள வேண்டும். பிபிசி என்பது கறைபடிந்த அமைப்பு. இந்தியாவுக்கு எதிராக பணியாற்றி கறுப்பு வரலாறு அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது.

முத்தலாக், அயோத்தி தீ்ர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி

BJP blasts the BBC for its "venomous" portrayal on India.

தீவிரவாதி ஒருவரை கவர்ச்சிகரமான இளம் தீவிரவாதி என்று பிபிசி கடந்த காலத்தில் புகழ்ந்தது நினைவிருக்கும். ஹோலி பண்டிகையை அருவருப்பான பண்டிகை என்று பிபிசி சேனல் விமர்சித்தது.
இந்தியாவில் பணியாற்றும் பிபிசி சேனல், அரசியலமைப்புச் சட்டம் பற்றி குறைந்த அளவை அக்கறையோடு இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் உலாவரும் போது, பல சக்திகள் அவரை விரும்பவில்லை. காங்கிரஸ்,  அதன் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் பிற எதிர்க்கட்சிகள்கூட நாட்டின் வளர்ச்சி வலிக்கிறது.

டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

BJP blasts the BBC for its "venomous" portrayal on India.

தேசத்துக்கு எதிரான சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது.  மோடி மீதான உங்களின் வெறுப்பு, புலனாய்வு அமைப்பின் பணியைக்கூட அரசியலாக்கும் நிலை இருக்கிறது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அதிகாரங்களை நீங்கள் எப்போதும் கேள்வி கேட்கிறீர்கள்

இவ்வாறு பாட்டியா தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios