நீட்டா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை பற்றி தெரியுமா..?
நீட்டா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய எளிமையான வாழ்க்கை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் தொழிலதிபருமான நீட்டா அம்பானி, தற்போது ஒரு பெரும்பணக்காரரின் மனைவியாக உள்ளார். அவருக்கு தற்போது ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால், திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உள்ள நீட்டா அம்பானி , தனது பெயரில் பல முன் முயற்சி திட்டங்களை தொடங்கி உள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தை (NMACC) தொடங்கினார். இருப்பினும், முகேஷ் அம்பானியுடன் திருமணத்திற்கு முன்பு அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இதையும் படிங்க : டெல்லி மதுக்கொள்கை ஊழல்: முதல் முறை குற்றப் பத்திரிகையில் மனிஷ் சிசோடியா பெயர் சேர்ப்பு
நீட்டா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை : நீட்டா தனது 22 வயதில் முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொண்டார், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு வருவதற்கு முன்பு, எளிமையான வளர்ப்பையும் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நடுத்தர வர்க்க குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் பெற்றோர் ரவீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால். நீட்டாவுக்கு மம்தா என்ற சகோதரி உள்ளார்.
நீட்டா அம்பானி தனது 6 வயதில் பரதநாட்டிய நடனத்தை கற்க தொடங்கினார். பின்னர் பல ஆண்டுகள் பயிற்சி பெற்று ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார். முகேஷ் அம்பானியை சந்தித்தபோது நீட்டா, பள்ளி ஆசிரியராக இருந்தார். 1985-ல் முகேஷ் அம்பானிக்கும் நீட்டா அம்பானிக்கும் திருமணம் நடைபெற்றது. எனினும் தனது திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியராக பணிபுரிந்தார். திருமணத்திற்குப் பிறகு, நீட்டா தலால் தனது கணவர் முகேஷ் அம்பானியின் பெயரைப் பெற்றார்.
இதற்கிடையில், நீட்டாவின் பெற்றோர், நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையை பின்பற்றினர். நீட்டாவின் தந்தை ரவீந்திரபாய் தலால், மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார். நீட்டா அம்பானியின் சகோதரி மம்தா மும்பையில் பள்ளி ஆசிரியையாகவும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாருக்கானின் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையுடம் படிங்க : ஆபரேஷன் காவேரி: முதல்கட்டமாக 278 இந்தியர்களுடன் சூடானில் இருந்து புறப்பட்டது இந்திய போர்க்கப்பல்..