Asianet News TamilAsianet News Tamil

மதுபான கொள்கை வழக்கில் விசாரிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!!

மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை  போலீஸ் வழக்கில் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi liquor policy case: CBI summons Delhi CM Arvind Kejriwal for questioning on April 16th
Author
First Published Apr 14, 2023, 5:46 PM IST | Last Updated Apr 14, 2023, 6:12 PM IST

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரும் ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு நேரில் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி இன்று மாலை 6:00 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.  

"கொடுங்கோன்மைக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில் மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்துவேன்" என அக்கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி (குற்றச் சதி), 477 ஏ (மோசடி நோக்கம்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக்காவல்... டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!     

கடந்த ஆண்டு ஜூலை மாதம், டெல்லி லெப்டினன்ட் ஆளுநர் வி.கே.சக்சேனா, புதிய கலால் வரிக் கொள்கை தனியார் மது விற்பனையாளர்களுக்கு பலன்களை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து இருந்தார். பின்னர் ஆகஸ்ட் மாதம், டெல்லி-என்சிஆர் மற்றும் பஞ்சாபில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ தவிர அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. புதிய கலால் கொள்கை குறித்து ஆலோசிக்க  அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு பிபவ் குமார் சென்று இருந்தாரா என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. 

பிபவ், சிசோடியா மற்றும் பலர் கலால் கொள்கை வழக்கில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான பணத்தை கையூட்டாக பெற்றதாகவும், இதற்காக 170 போன்களை பயன்படுத்தியதாகவும், அவற்றில் தகவல்களை அழித்தும், மாற்றியும் இருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர். 

மார்ச் 21க்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்... மணீஷ் சிசோடியாவுக்கு கெடு விதித்த பொதுப்பணித்துறை!!

இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷாவிடமும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. பிபாவைப் போலவே, ஜாஸ்மின் ஷாவும் டெல்லியின் புதிய கலால் கொள்கையை உருவாக்குவது தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கலால் கொள்கை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் ஷா டெல்லியின் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார். தனியார் டிஸ்காம் குழுவில் இருந்துஜாஸ்மின் ஷா உள்பட நான்கு பேரை டெல்லி லெப்டினன்ட் ஆளுநர்  வி.கே.சக்சேனா நீக்கி இருந்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios