மார்ச் 21க்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்... மணீஷ் சிசோடியாவுக்கு கெடு விதித்த பொதுப்பணித்துறை!!

மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

govt house should be vacated by march 21 orders public works depat to manish sisodia

மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு  பொதுப்பணித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்.26 ஆம் தேதி கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மார்ச்.20 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் கைது; இன்டர்நெட் சேவை முடக்கம்

இதை அடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ கைதையடுத்து டெல்லி துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா விலகினார். ஹவாலா பண மோசடி வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

சிசோடியாவுக்கு கவனித்து வந்தத் துறைகளை அதிஷி, ஜெயின் வசம் இருந்தத் துறைகளுக்கு பரத்வாஜ் என்பவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பதவியேற்றுவிட்டனர். அவர்களுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினர் அந்த வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இதனால் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அரசு இல்லத்துக்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்து கொடுக்குமாறு சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினருக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios