Amritpal Singh: பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் கைது; இன்டர்நெட் சேவை முடக்கம்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைதானதும், பஞ்சாபில் இன்டர்நெட் பயன்பாடும் 24 மணிநேரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மெஹத்பூர் பகுதியில் வாரிஸ் பஞ்சாப் அமைப்பைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நண்பகலில் ஜலந்தரின் ஷாகோட் பகுதியில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் துரத்த ஆரம்பித்தனர். அப்போது காவல்துறையின் நடவடிக்கை பற்றிய தகவல் எப்படியோ கசிந்து, அவரது கூட்டாளிகள் அவரை எச்சரித்தனர். மெஹத்பீரில் வைத்து கைது செய்துவிட்டது. மாநிலம் முழுவதும் நடைபெறும் சோதனையில் அம்ரித்பாலின் கூட்டாளிகளும் மெஹத்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் போலீசார் கூறுகின்றனர்.
அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் காவல்துறை பொதுமக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆஸ்கர் மேடையில் அவமதிப்பு! ஆவணப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை
"அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். சட்டம் ஒழுங்கை பேண பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. குடிமக்கள் பீதியடைய வேண்டாம். போலி செய்திகளையோ வெறுப்பு பேச்சுகளைப் பரப்பவோ வேண்டாம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அம்ரித்பால் எந்தெந்த பிரிவுகளில் கீழ் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் இன்னும் வெளியிடவில்லை. அமிரித்பால் 'கால்சா வாஹிர்' என்ற பெயரில் மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் இரண்டாவது சுற்றுப்பயணத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகட்சாரிலிருந்து தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக பஞ்சாப் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை பஞ்சாப் போலீஸ் கைது செய்தது. அமிர்தசரஸின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டிருந்தார். இந்தக் கைது நடவடிக்கையை அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாகக் கண்டித்தனர். மறுதினமே காவல் நிலையத்திறகுள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் நுழைந்த அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் ஆதரவாளரை விடுத்து அழைத்துச் சென்றனர்.
4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருளர் பழங்குடி மக்கள்! ராக்கிகாரி எலும்புக்கூடுகள் கூறும் வரலாறு!