சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் பீதி கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 965 பேராக உயர்ந்துள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. 

இதையும் படிங்க:  சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

திசை தெரியாத காட்டில் சிக்கித் தவிப்பது போல, உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில்  இதுவரை இந்த வைரஸால் 1024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் மேலும் பரவாமல் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்களுக்கு கிடைத்துள்ள நன்மை அவர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக டெல்லியில் நீண்ட காலமாக தீர்வு கிடைக்காமல் இருந்து வந்த காற்றுமாசு பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு கிடைத்துள்ளது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளதால், வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது. 

இதையும் படிங்க: கொரோனாவின் கோரப்பிடியில் பாகிஸ்தான்... மின்னல் வேகத்தில் உயரும் பாதிப்பு...!

அதேபோல் நச்சு புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகளும் இயங்காததால், காற்றின் தரத்தை குறைக்க கூடிய நுண் துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளிப்பாடு கணிசமாக குறைந்துள்ளது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் 39 நகரங்களின் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.