9 மற்றும் 10 ஆம் வகுப்பு. அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டதற்கு 1,800 விஞ்ஞானிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.ஆர்.டி, பாடப்புத்தகங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை நீக்கி வருகிறது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்களின் சுமையைக் குறைக்க பாடத்திட்டத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக 12-ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து குஜராத் கலவரம், முகலாயப் பேரரசு தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து மகாத்மா காந்தி மற்றும் கோட்சே தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டது.. இப்படி பாடப்பகுதிகள் நீக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு. அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு தொடர்பான பகுதி நீக்கப்பட்டது.. இந்த நிலையிஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இருந்து 1,800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதையும் படிங்க : குரங்குகள் இயற்கையாக இறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? குரங்குகள் எப்படி இறக்கும் தெரியுமா..?

இந்திய அறிவியல் கழகம், டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் போன்ற குறிப்பிடத்தக்க அறிவியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர். அதில் “ பரம்பரை மற்றும் பரிணாமம்' என்ற அறிவியல் பாடப்புத்தகத்தின் 9-வது அத்தியாயம் 'பரம்பரை' என்று மாற்றப்பட்டது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை அகற்றுவது ஒரு 'கல்வியின் கேலிக்கூத்து' என்று விஞ்ஞான சமூகம் நம்புகிறது, மேலும் இந்த அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தாமல் மாணவர்கள் தங்கள் சிந்தனை செயல்முறைகளில் ஊனமுற்றவர்களாக இருப்பார்கள்.

விஞ்ஞான மனப்பான்மை மற்றும் பகுத்தறிவு உலகக் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு பரிணாம செயல்முறை முக்கியமானது. டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடு விமர்சன சிந்தனை மற்றும் அறிவியல் முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கிறது.

உயிரியல் உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் சில குரங்கிலிருந்து பரிணமித்துள்ளனர் என்பது டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்ததிலிருந்து பகுத்தறிவு சிந்தனையின் அடித்தளமாக உள்ளது. எனவே டார்வினின் இயற்கை தேர்வு குறித்து பகுதிகளை நீக்கியதை கண்டிக்கிறோம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவராக பாஜக எம்.எல்.ஏ பங்கஜ் சிங் போட்டியின்றி தேர்வு..