Asianet News TamilAsianet News Tamil

குரங்குகள் இயற்கையாக இறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? குரங்குகள் எப்படி இறக்கும் தெரியுமா..?

இயற்கையாக இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாராலும் பார்க்க முடியாது என்பது உண்மைதான்.  

Have you seen monkeys die naturally..? Do you know how monkeys die?
Author
First Published Apr 24, 2023, 5:48 PM IST | Last Updated Apr 24, 2023, 5:53 PM IST

நாய், பூனை, எலி, மாடு போன்று குரங்குகள் இறந்து கிடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறீர்களா? யோசித்து பார்த்தால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆம். இயற்கையாக இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாராலும் பார்க்க முடியாது என்பது உண்மைதான். மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குரங்குகளுக்கு தாங்கள் இறக்கப் போகும் தேதி பற்றி தெரியுமாம். அன்றிலிருந்து குரங்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவும் தண்ணீரும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்குமாம்.. 

குரங்குகள் கடவுளின் அவதாராமா..?

ஒரு குரங்கு இறக்கும் தருவாயில், அது அமைதியாகவும் மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அடர்ந்த காட்டில் கரையான் புற்றுக்கு அருகில் படுத்துக்கொள்ளும் என்றும், கரையான் அதை உண்ண அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. கரையான் அதன் உடலை உண்ணும் என்றும், குரங்குகளின் உடலை கரையான் புற்று மறைத்துவிடும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க : நெற்றியில் விபூதியை மோதிர விரலால் வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? மற்ற விரல்களில் விபூதி வைத்தால்?

ஒருவேளை குரங்குகள் பலத்த காயமடைந்து சாலையில் இறந்தாலும், மற்ற குரங்குகள், இறந்த குரங்குகளின் உடலை இழுத்துச் சென்று கரையான் புற்றுக்கு அருகில் வைத்திருக்குமாம். பின்னர் அந்த இறந்த குரங்கின் உடலை கரையான் புற்று மறைக்கும் அருகிலேயே மற்ற குரங்குகள் அமைந்திருக்குமாம்.

கடவுள் ராமர், ஆஞ்சநேயருக்கு கொடுத்த வரத்தின் காரணமாக குரங்குகளுக்கு இறக்கும் நேரம் முன்கூட்டியே தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.. குரங்குகளுக்கு தான் இறக்கும் நிலையை அறிய வேண்டும் என்பதும், யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கரையான்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதும், குரங்குகளின் உடல் உறுப்புகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதே ராமர் கொடுத்த வரம். இந்த வரத்தின் காரணமாகவே குரங்குகளின் இறந்த உடலை யாரும் பார்க்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.. 

சமீபத்திய ஆராய்ச்சியில், குரங்குகள் தங்கள் இறப்பை அறிந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். விலங்குகள் மரணத்தை எவ்வாறு கையாள்கின்றன என்பது தொடர்பான ஆய்வில் விஞ்ஞானிகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, குரங்குகள் தங்களின் சடலங்களை பரிசோதிப்பது, பாதுகாப்பது, மீட்டெடுப்பது, எடுத்துச் செல்வது அல்லது இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. எனினும் குரங்குகள் மரணத்தைப் பற்றி அறிந்திருக்கிறதா என்பதையும் அவை எந்த அளவிற்கு உள்ளன என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. 

இதையும் படிங்க : “ பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்..” மதத்தலைவரின் பேச்சை நம்பியதால் 47 பேர் பலி...
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios