Asianet News TamilAsianet News Tamil

நெற்றியில் விபூதியை மோதிர விரலால் வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? மற்ற விரல்களில் விபூதி வைத்தால்?

விபூதியை எந்த விரலில் வைத்தால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

How to apply Holy Ash on forehead in Tamil
Author
First Published Apr 22, 2023, 6:11 PM IST | Last Updated Apr 22, 2023, 6:13 PM IST

பொதுவாக நமக்கு எந்த பிரச்னைகள் அல்லது குழப்பங்கள் ஏற்பட்டாலும் நாம் உடனே அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது நமக்கு பிடித்த கோவிலுக்கோ தான் செல்வோம். அதே போன்று என்ற 1 மகிழ்ச்சியான தருணம் அல்லது எந்த ஒரு நற்செயலை செய்யும் முன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்த பின் தான் அடுத்த வேலையை செய்வோம்.

அப்படி நாம் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்கையில் கோவிலில் இருக்கும் அர்ச்சகர் சுவாமிக்கு தீப அல்லது கற்பூர ஆராதனை காண்பித்த பிறகு நம்மிடம் காண்பிப்பார்கள். பின் நாமும் கற்பூர ஆராதனையை தொட்டு கும்பிட்ட பிறகு விபூதியோ அல்லது குங்குமத்தையோ இட்டுக் கொள்வோம்.

குறையாத செல்வமும், மகிழ்வான வாழ்வும் பெற:

ஒரு சிலர் காலையில் எழுந்து,வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து தினமும் நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டு கொண்டு தான் வேலைக்கே செல்வார்கள். இந்த மாதிரி நாம் விபூதியை நெற்றியில் வைத்துக் கொள்வதால் பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது .

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் குறையாத செல்வமும், மகிழ்வான வாழ்வும் பெறுவோம் என்பது ஐதீகம்.
தவிர விபூதி எனில் ஐஸ்வர்யம் மற்றும் மகிமை என்று இரு பொருள்கள் உண்டு. ஒருவர் எப்பேர்பட்டவராக இருப்பினும் இறுதியில் பிடி சாம்பல் தான் என்னும் தத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துகிறது.அப்படியான விபூதியை எந்த விரலில் வைத்தால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கட்டை விரல்:

கட்டை விரலால் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டால் நாட்பட்ட மற்றும் தீராத வியாதிகள் ஏற்படும்.

ஆட் காட்டி விரல்:

ஆட் காட்டி விரலால் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து வந்தால் வீட்டில் இருக்கும் பொருட்கள் நாசம் அடையும் .

நடுவிரல்:

நடுவிரலால் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து வந்தால் வாழ்வில் நிம்மிதியற்ற சூழல் ஏற்படும்.

மோதிர விரல்:

மோதிர விரலால் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து வந்தால் உங்களது வாழ்வு மகிழ்ச்சியானதாக மாறும்.

சுண்டு விரல் :

சுண்டு விரலால் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து வந்தால் உங்களுக்கு கிரக தோஷம் உண்டாகும்

ஆகையால் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் விபூதியை எடுத்து பின் மோதிர விரலால் மட்டுமே விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வது சிறப்பாகும். இதுவே விபூதியை வைத்துக் கொள்ளும் சரியான முறையாகும்.

விபூதி இடுத்துக்கொள்வதால் பலன்கள்:

இப்படி உங்கள் நெற்றியில் விபூதியை இடுவதால் இந்த உலகமே உங்கள் வசமாகும், அதிர்ஷ்டமும் பணமும் வீடு தேடி வரும், ஏன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும், கையில் எடுக்கும் காரியங்களும் வெற்றியில் தான் முடியும்.

விபூதி அணிவதால், மனதில் இறை பக்தி அதிகரித்து நிமிடம் உள்ள தீய எண்ணங்கள் விலகும். நல்ல நேர்மறையான எண்ணங்கள்உருவாகும். நிலையான செல்வமும், நல்ல குடும்பம், நல்லவர்களின் சேர்க்கை என்று எண்ணற்ற நற் பலன்களைப் பெற முடியும்.

உடல் ஆரோக்கியம் சிறந்து விலகும். தகாத செயல்கள் செய்ய மனம் யோசிக்கும். எப்பேர்ப்பட்ட தொல்லைகள் அல்லது சிக்கல்களும் நம்மிடம் நெருங்காமல் தடுக்கும்.

11 நாட்கள் இந்த பூஜை செய்து பாருங்க! பணக்கஷ்டமும், வறுமையும் உங்கள் வீட்டை விட்டு ஓடும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios