Asianet News TamilAsianet News Tamil

11 நாட்கள் இந்த பூஜை செய்து பாருங்க! பணக்கஷ்டமும், வறுமையும் உங்கள் வீட்டை விட்டு ஓடும்.

பணக்கஷ்டம் வராமல் இருக்க தாந்த்ரீக பரிகாரத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

Do this cardamom pooja for 11 days to get prosperous life
Author
First Published Apr 20, 2023, 12:03 PM IST | Last Updated Apr 20, 2023, 2:24 PM IST

நாம் ஓடி திரிந்து சம்பாதிப்பது எல்லாம் 4 காசு சேர்க்க தான். காசு சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை.சேர்த்த காசு கூட செலவாகி விடுகிறது என்று பலரும் வறுத்தப்படுவதை நாம் பார்த்து இருப்போம். இதனை தாந்திரிக பரிகாரம் மூலம் சரி செய்து கொள்ளலாம். பணக்கஷ்டம் வராமல் இருக்க தாந்த்ரீக பரிகாரத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

பச்சைக் கற்பூரத்திற்கு அடுத்தாக ஏலக்காயிற்கு பணத்தை ஈர்க்க கூடிய ஒரு அபாரமான சக்தி உள்ளது. அப்படிப்பட்ட ஏலக்காயை 11 நாட்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதன் மூலமாக பணக்கஷ்டம் மற்றும் கடன் இல்லாமல் செழிப்புடன் வாழலாம்.

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் தொடங்குவது என்பது சிறப்பாக இருக்கும். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்ததன்று ஆரம்பித்து தொடர்ந்து இதனை 11 நாட்கள் வரை செய்ய வேண்டும். அதாவது 11 நாட்கள் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து இதனை செய்து வர வேண்டும். ஒரு நாளைக்கு 3 ஏலக்காய் வீதம் 11 நடக்களுக்கு 33 ஏலக்காய் தேவைப்படும்.

வேலை தேடுபவர்கள், பதவி உயர்விற்கு முயற்சி செய்பவர்கள், எப்போதும் வறுமை, அன்றாட தேவைக்கு கூட மிகவும் சிரமப்படும் படியான ஒரு சூழலில் இருப்பவர்கள் என்று  இருப்பவர்கள் இதனை ஒரு முறை செய்து பார்த்தால் நல்ல தொரு பலன் நிச்சயமாக கிடைக்கும்.

எப்போது செய்ய வேண்டும்:

வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து 10.30 மணிக்குள்ளாக (ராகு காலத்திற்கு) முன்பு இந்த பூஜையை செய்து முடித்திட வேண்டும். அல்லது பௌர்ணமி/வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள்ளாக இந்த பூஜையை செய்து விட வேண்டும்.

எப்படி பூஜை செய்வது:

வெள்ளிக்கிழமையன்று எப்போதும் போல் விளக்கு ஏற்றி விட்டு குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு வலது கையில் 3 ஏலக்காய்களை மடித்து வித்துக் கொண்டு , லட்சுமி குபேரர் மற்றும் மஹாலக்ஷ்மியை மனதால் பிராத்தனை செய்து கோலா வேண்டும். ( வறுமை நீங்கி சுபீட்சம் பெறுக, வேலை கிடைக்க, தொழிலில் லாபம் கிடைக்க ) என்று உங்களது பணத்தட்டுப்பாடு வேண்டுதலை வேண்டிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு சிறிய பாக்சில் போட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு 11 நாட்கள் இதனை செய்து வர வேண்டும். 11 வது நாளில் உங்களிடம் 33 ஏலக்காய்கள் இருக்கும். இதனை ஒரு மஞ்சள் துணியில் போட்டு கட்டி உங்கள் பீரோ அல்லது கல்லாப்பெட்டி அல்லது பணப்புழக்கம் அதிகமுள்ள இடத்தில வைத்து விட வேண்டும்.

இதனை ஏலக்காய்களை 3 மாதம் வரை எதுவும் செய்யக்கூடாது. அதே நேரத்தில் இதனை மிகவும் சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி காமிக்க வேண்டும். 3 மாதத்திற்கு பிறகு இந்த ஏலக்காய் முடிச்சை நீர் நிலைகளில் அல்லது கோவில்களில் இருக்கும் மரத்திற்கு அடியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு பணக்கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும்.

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்து வாழும் வாழ்வை வளமுடன் வாழுங்கள்.

Vastu Tips: மறந்தும் மற்றவர்களுக்கு இந்த சமையல் பொருட்களை கடனாக கொடுக்காதீங்க! தவறி கொடுத்தால்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios