இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவராக பாஜக எம்.எல்.ஏ பங்கஜ் சிங் போட்டியின்றி தேர்வு..
இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவராக உ.பி பாஜக எம்.எல்.ஏ பங்கஜ் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநில நைனிடால் மாநில விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு மற்றும் தேர்தல் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவராக உ.பியின் நொய்டா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பங்கஜ் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2வது முறையாக பொதுச்செயலாளர் பதவிக்கு மணீந்தர் பால் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பொருளாளராக சுதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், குஜராத், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இரண்டு உறுப்பினர்களும், சண்டிகர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், பீகார், தமிழ்நாடு, ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார்ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து தன்னை போட்டியின்றி தேர்ந்தெடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கஜ் சிங் நன்றி தெரிவித்தார். மேலும், "சைக்கிள் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து விளையாட்டு வீரர்களும் சிறந்த வசதிகளை பெறுவதை உறுதி செய்வேன். மேலும் அடிமட்டத்தில் இருந்து கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர்களை தொடர்ந்து ஈபிஎஸ் வேட்பாளரும் வாபஸ்!!
மேலும் பேசிய அவர் “ சைக்கிள் ஓட்டுதல் மிகவும் பிரபலமான விளையாட்டு, ஆனால் நாம் அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு, அடி மட்டத்தில் உள்ள வீரர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. அவர்களை ஊக்குவித்து, தேசிய அளவில் பதக்கங்களை வெல்ல முடியும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி என்று..” என்று தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ஆசிய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஓன்கர் சிங் கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டார். தேர்தல் நடத்தும் அதிகாரி நீதிபதி ஆர்.கே.கௌபா தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.
இதையும் படிங்க : குரங்குகள் இயற்கையாக இறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? குரங்குகள் எப்படி இறக்கும் தெரியுமா..?