காங்கிரஸ் கட்சி இதுவரை கர்நாடகாவில் 209 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. 3வது பட்டியலிலும் சித்தராமையாவுக்கு அவர் விரும்பும் கோலார் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்களில் 166 வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டது. 58 பெயர்களை நிலுவையில் வைத்திருந்தது. இன்று (சனி்க்கிழமை) 43 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

கோலார் சீட்டு கேட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, அந்தத் தொகுதி மறுக்கப்பட்டு, கோதூர் மஞ்சுநாத்துக்கு கோலார் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெ வருணாவைத் தவிர, கோலார் தொகுதியிலும் சீட்டு கேட்டிருந்தார் சித்தராமையா. ஆனால், கட்சி அவரது கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

கர்நாடகா தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தி... மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

டிகே சிவக்குமார், ஜி. பரமேஸ்வரா உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையாவுக்கு இரண்டாவது சீட்டு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதேபோல முன்னாள் அமைச்சரும் நடிகையுமான உமாஸ்ரீக்கு வாய்ப்பு வழங்க மறுத்திருக்கும் காங்கிரஸ், சித்து கண்ணூருக்கு சீட் கொடுத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி யாருக்கு என்பதிலும் பெரும் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மூத்த தலைவர் டி.கே. சிவகுமாரும் முதல்வராக ஆசைப்படுகிறார். ஆனால், இவர்கள் இருவருக்கும் மாற்றாக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அக்கட்சியின் தேசியத் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே முதல்வராகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாய்! ஹைதராபாத் பக்தர்கள் செலுத்திய காணிக்கை