கர்நாடகா தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தி... மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஷிவமோக்காவில் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

shivamogga senior bjp leaders and executives have resigned

ஷிவமோக்காவில் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மே.10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: நந்தினி Vs அமுல்.. பாஜக - காங்கிரஸ் மோதல் - குறுக்க இந்த குஜராத் மிளகாய் வந்தா.!

பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் புதிதாக 52 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10.5% உள் ஒதுக்கீடு நீட்டிப்பு.. வன்னியர்களுக்கு சமூக அநீதி - கொந்தளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தங்களுக்கு சீட் வழங்கவில்லை என பாஜக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக ஷிவமோக்காவில் உள்ள பாஜகவைச் சேர்ந்த மேயர் மற்றும் துணைமேயர் உட்பட 19 மாநகராட்சி உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமண் சவாடி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios