காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து அளிக்கப்பட்டு வருகிறதுது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு (83) நேற்று நள்ளிரவு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
மல்லிகார்ஜூன கார்கே உடல்நலக்குறைவு
மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். அவரை உடலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அவர் குணம் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை குறித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தொலைபேசியில் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7ம் தேதி பொதுக்கூட்டம்
செப்டம்பர் 24ம் தேதியன்று பாட்னாவில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் விரிவான கூட்டத்தில் கார்கே பங்கேற்றிருந்தார். அக்டோபர் 7ம் தேதி நாகாலாந்தின் கோஹிமாவில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
