bharat jodo yatra: rahul gandhi: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை: கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரை சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு செல்கிறது. குறைவான இடத்தில்தான் வாகனங்கள் செல்கின்றன. இதை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வேட்புமனு?: எம்எல்ஏக்களுடன் திடீர் சந்திப்பு
கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே. விஜயன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். மணிக்குமார், நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அமர்வு முன் நாளை(வியாழக்கிழமை)விசாரணைக்கு வருகிறது
இந்த மனுவில் விஜயன் கூறியிருப்பதாவது “ காங்கிரஸ் வயநாடு எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். அவர் செல்லும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் சாலை முழுவதையும் ஆக்கிரமித்துச் செல்கிறது.மிகக்குறைவான பாதையில்தான் வாகனங்கள் செல்லமுடிகிறது.
மத நல்லிணக்கத்தை பேணிய இஸ்லாமியர்கள்... திருப்பதி கோயிலுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை!!
காங்கிரஸ், ராகுல் காந்தி, கேரள காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீஸன் ஆகியோர் மத்தியஅரசு, மாநில அரசுகள் வகுத்துள்ள சட்டங்களை மதிக்காமல் யாத்திரையை நடத்துகிறார்கள். நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளையும் மூவரும் கடைபிடிக்கவில்லை. இந்த கேரள பொதுவழி சட்டம் 2011 பிரிவை அப்பட்டமாக மீறி யாத்திரை நடத்தப்படுகிறது.
பொதுமக்களை பாதிக்காதவகையில் யாத்திரையை நடத்த வேண்டிய பொறுப்புள்ள மாநிலஅரசு, போஸீலார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தன்னிச்சையான செயல். சட்டவிரோதமானது, நியாயமற்றது.
ஊர்வலத்தை நடத்தும் விதம் போக்குவரத்து மற்றும் மக்கள் தங்களின் இயல்பான வாழக்கைக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது.யாத்திரை கடந்து செல்லும் பகுதிகளில் சாமானியர்களின் வாழ்க்கையை பாதிக்கப்படுகிறது. ஆதலால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருகிறது ஆப்பு: தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை
ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. ஏறக்குறைய 150 நாட்கள் செல்லும் யாத்திரையில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 3,570 கி.மீ தொலைவு ராகுல் காந்தி பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.