மத நல்லிணக்கத்தை பேணிய இஸ்லாமியர்கள்... திருப்பதி கோயிலுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை!!
சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை வழங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுபினா பானு மற்றும் அப்துல் கனி ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். இஸ்லாமிய தம்பதிகளான இவர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது கால அட்டவணை!!
பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் 1.02 கோடி ரூபாய்க்குரிய காசோலையை நன்கொடையாக வழங்கினர். இந்த தொகையில் அன்னதானத்துக்கு ரூ.15 லட்சமும், பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிப்பு பணிக்கு ரூ.87 லட்சமும் என மொத்தம் ரூ.1.02 கோடியை வழங்கினர்.
இதையும் படிங்க: 32 ஆண்டுகளுக்குப்பின் ! சினிமா பார்க்கத் தயாராகும் மக்கள்: ஸ்வாரஸ்யத் தகவல்
மத நல்லினகத்தை பேணும் வகையில் உள்ள இவர்களது செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம் இஸ்லாமிய இளைஞர்கள் திருப்பதி கோவிலுக்கு நிதி உதவி வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கும் மக்கள் பிளவுப்படுத்த நினைப்போருக்கும் இந்த சம்பவம் ஒரு பாடமாகவும் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.