Ashok Gehlot :காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வேட்புமனு?: எம்எல்ஏக்களுடன் திடீர் சந்திப்பு
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் போட்டியிடுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வேட்புமனுத்தாக்கலுக்கும் அவர் தயாராகிவிட்டார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் போட்டியிடுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வேட்புமனுத்தாக்கலுக்கும் அவர் தயாராகிவிட்டார்.
இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று இரவு அவசரமாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்பூரில் நடந்தது. அந்த கூட்டத்தில் தனது டெல்லி பயணம், வேட்புமனுத்தாக்கல் ஆகியவை குறித்து எம்எல்ஏக்களுடன் அசோக் கெலாட் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனால் வரும் 25 முதல் 28ம் தேதிக்குள் டெல்லி சென்று தலைவர் தேர்தலுக்கு அசோக் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் விலகினால், அடுத்ததாக மாநில முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாரேனும் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரள எம்.பி. சசி தரூரும் போட்டியிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சோனியா காந்தியையும் சந்தித்து சசி தரூர் அனுமதி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமருக்கு மட்டுமல்ல!அயோத்தியில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கும் கோயில்:வீடியோ இணைப்பு
அப்போது சோனியா காந்தி சசி தருரிடம் கூறுகையில் “காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாக, நேர்மையாக நடக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனால், சசி தரூருக்கு எதிராக, அசோக் கெலாட் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ அசோக் கெலாட் இன்று காலை 10மணிக்கு டெல்லி புறப்படுகிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபின், அங்கிருந்தவாறு கேரளாவுக்குச் சென்று, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கிறார். அதன்பின் வரும் 24ம் தேதி டெல்லி வரும் அசோக் கெலாட் 28ம்தேதி வரை டெல்லியில் தங்குகிறார். இந்த நாட்களில் அவர் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வார்.
காங்கிரஸ் கட்சியின் தீவிரமான தொண்டர் அசோக் கெலாட். கட்சிக்கு என்ன தேவையோ அதைசெய்யத் தயங்காதவர். சசி தரூர், அசோக் கெலாட் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் யார் வெல்வார்கள் எனக் கூற முடியாது.
ராஜஸ்தான் முதல்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தால், ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது கேள்விக்குள்ளாகும். ஆனாலும், சோனியா காந்தி ஏறக்குறைய தலைவர் பதவியிலிருந்து இறங்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்துப்படி,ராகுல் காந்தி தலைவராக வராத பட்சத்தில் அடுத்த தலைவராக அசோக் கெலாட் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும் அதுதான் சிறந்த வாய்ப்பாக இருக்க முடியும்.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருகிறது ஆப்பு: தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை
வடமாநில மக்களுக்கு தெரிந்த, அறிந்த முகமாக இருக்கும் ஒருவர்தான் தலைவராக இருக்கவேண்டும். அந்த வகையில்அசோக் கெலாட் பொருத்தமானவர். வடமாநிலங்கள், தென் மாநிலங்களில் அரசியல் நிலைத்தன்மையை கடைபிடிக்க சரியானவராக இருப்பார்.
கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தால், தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர், கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரளாவைச் சேர்ந்தவராக உள்ளார்”எனத் தெரிவித்தார்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் கூறுகையில் “ அசோக் கெலாட் வேட்புமனு, நிச்சயம் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஊக்கமாக இருக்கும். பாஜக 7 மாநிலங்களில் காங்கிரஸுடன் நேரடி போட்டியிடுகிறது.
ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் பாஜக நேருக்கு நேர் மோதுகிறது. இந்த மாநிலங்களில் நாம் சமநிலைப்படுத்த முடியும். அதேநேரம் நிர்வாகத்திறமை, அனுபவம், கட்சியை வழிநடத்திச் செல்லும் திறன் கெலாட்டுக்கு இருக்கிறது”எ னத் தெரிவித்தனர்.