yogi adityanath temple:ராமருக்கு மட்டுமல்ல!அயோத்தியில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கும் கோயில்:வீடியோ இணைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பாரகுந்த் பகுதியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தொண்டர் ஒருவர் ஆளுயர சிலை வைத்து கோயில் கட்டியுள்ளார்.

yogi adityanath temple: UP CM is referred to as a "incarnation of Lord Ram" at the Yogi Adityanath temple in Ayodhya.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பாரகுந்த் பகுதியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தொண்டர் ஒருவர் ஆளுயர சிலை வைத்து கோயில் கட்டியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில்தான் இந்த கோயிலுக்கும் பக்தர் அடிக்கல் நாட்டினார்.

ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

yogi adityanath temple: UP CM is referred to as a "incarnation of Lord Ram" at the Yogi Adityanath temple in Ayodhya.

இந்த கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் ஆளுயர சிலையும் தலைக்குப் பின்புறம், வில், அம்பு சிலையும், மூலஸ்தானத்தைச் சுற்றி காவி நிறத்தில் டிசைனும் போடப்பட்டுள்ளது.தினசரி இரு வேளை பூஜையும், பூஜை முடிந்தபின் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

பாஜகவைச் சேர்ந்தவரும், ஆதித்யநாத்தின் தீவிரப் பற்றாளருமான பிராபர் மவுரியா இந்த கோயிலைக் கட்டியுள்ளார்.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்

பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில், ராம்ஜென்மபூமியிலிருந்து 25கி.மீ தொலைவில் பாராகுந்த் நகரம்அமைந்துள்ளது. ராமர் ஆட்சியைவிட்டு செல்லும்போது அவரின் சகோதரர் பரதன், பாராகுந்த்வரை வந்து வழியனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டியது குறித்து பிரபாகர் மவுரியா கூறுகையில் “ ராமருக்கு கோயில் கட்டிவரும் யோகி ஆதித்யநாத்துக்கு நான் கோயில் கட்டியிருக்கிறேன். உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத்தின் பணிகளைப் பார்த்து வியப்படைந்தேன்.

yogi adityanath temple: UP CM is referred to as a "incarnation of Lord Ram" at the Yogi Adityanath temple in Ayodhya.

 மக்களுக்காக அவர் செய்த பணிகளால் கடவுள் நிலைக்கு ஆத்தியநாத் உயர்ந்துவிட்டார். அதனால்தான் எனக்கு அவருக்காக கோயில் கட்டும் எண்ணம் வந்தது. ராமருக்கு மந்திரம் சொல்லி வழிபாடு செய்வதைப் போல் யோகிக்கும் வழிபாடு செய்கிறேன்.

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை: டெல்லி குருதுவாரா சீக்கிய நிர்வாகிகள் சந்திப்பு

எனக்கு எந்த வேலையும், சொத்துகளும் இல்லாத நிலையில் எவ்வாறு கோயில் கட்டினீர்கள் என்று கேட்கிறார்கள். நான் பஜனை பாடல்கள் நன்றாகப் பாடுவேன். ஏராளமான பஜனைப் பாடல்களை யூடியூப்பில் பாடி வெளியிட்டிருக்கிறேன். இதன் மூலம் மாதம் ரூ.ஒரு லட்சம் வருமானம் கிடைக்கிறது. அந்த பணத்தில்தான் கோயில் கட்டியிருக்கிறேன்.” எனத் தெரிவி்த்தார்
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios