சட்ட படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு.. விவரம் உள்ளே..

அடுத்த கல்வியாண்டிற்கான கிளாட் தேர்வு டிச.18 ஆம் தேதி நடக்கவுள்ளது. 

CLAT Entrance Exam Date Notification 2022

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள 32 சட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை கிளாட் (CLAT - Common Law Admission Test) எனும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆண்டுத்தோறும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த (2023- 2024) கல்வியாண்டியற்கான கிளாட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் டிச. 18 ஆம் தேதி கிளாட் நுழைவுத்தேர்வு நடத்தபடவுள்ளது.

மேலும் படிக்க:ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ..

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2022. https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 4 ஆயிரம் ரூபாயும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 3,500 ரூபாயும் செலுத்த வேண்டும். கிளாட் நுழைவுத் தேர்வை பொறுத்தவரை மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு சுமார் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். 

மேலும் படிக்க:ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios