Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு NEET PG 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி ?

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு நீட் முதுகலை 2022 ஆம் ஆண்டுக்கான கவுன்சிலிங் 2ம் சுற்று ஒதுக்கீடு பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Tamilnadu NEET PG 2022 Counselling Round 2 Allotment List released check on tnmedicalselection.net
Author
First Published Nov 1, 2022, 2:11 PM IST

மாநில நீட் முதுகலை சுற்று 2-க்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் tnmedicalselection.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒதுக்கீடு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில், மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு மாணவர்கள் மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் முதலில் தங்கள் பிறந்த தேதி மற்றும் ரோல் எண் போன்றவற்றை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

2வது சுற்றில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள் உறுதி செய்யப்பட்டவுடன், ராஜினாமா செய்ய முடியாது மற்றும் மாநில நீட் முதுகலை கவுன்சிலிங் 2022 ஆம் ஆண்டின்  அடுத்த சுற்றுகளில் பங்கேற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilnadu NEET PG 2022 Counselling Round 2 Allotment List released check on tnmedicalselection.net

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

ஒதுக்கீடு பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?:

1.தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் tnmedicalselection.net என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2.பின்னர், முதுகலை படிப்பு என்பதைக் கிளிக் செய்து முதுகலை மருத்துவத்தை தேர்வு செய்யவும்.

3.ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கொடுக்கப்படும்.

4.விண்ணப்பதாரர்கள் உள்நுழைவைக் கிளிக் செய்து விவரங்களை பதிய வேண்டும்.

5.ஒதுக்கீடு பட்டியல் திரையில் கிடைக்கும். ஒதுக்கீட்டுப் பட்டியலை பதிவிறக்கம் செய்து நகலை எடுத்துக் கொள்ளவும்.

6.விண்ணப்பதாரர்கள், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் கொண்டு வர வேண்டிய ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

Follow Us:
Download App:
  • android
  • ios