Asianet News TamilAsianet News Tamil

ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ..

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

Ariyalur Child protection unit recruitment notification 2022
Author
First Published Nov 6, 2022, 3:41 PM IST

நிறுவனம்: தமிழக அரசு ( அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு)

பணியின் பெயர்: ஆற்றுபடுத்துநர் ( Counsellor)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://ariyalur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!

முகவரி: 

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, 
இரண்டாவது தளம்‌, 
அரசு பல்துறை வளாகம்‌, 
ஜெயங்கொண்டம்‌ சாலை, 
அரியலூர்‌ – 621 704.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது 45 க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: 

பணிக்கு தொடர்புடைய உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனை: 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

தொண்டு நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள்,குழந்தை இல்லங்களில் ஆகியவற்றில் குழந்தை சார்ந்த Counselling பணியில் 1 ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.18,536 வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

Follow Us:
Download App:
  • android
  • ios