சந்திரயான் 3 வெற்றி.. நிலவில் வரலாற்று சாதனை படைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா!

பாதுகாப்பாக, சாஃப்ட் லேண்டிங் செய்ததன்  மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Chandrayaan 3 success..India made a historic record on the moon and made the world look back!

நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் எனப்படும் மென்மையான தரையிறக்கம் மூலம் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளோம்.. பாதுகாப்பாக, சாஃப்ட் லேண்டிங் செய்ததன்  மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

 

நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இஸ்ரோ வடிவமத்த திட்டம் தான் சந்திரயான் 1. இந்த திட்டம் தற்போது நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 வரை வெற்றி பெற்றுள்ளது. நிலவின் தென் துருவத்தில் குறிப்பிடத்தக்க அளவு பனி உள்ளது. இதிலிருந்து தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருளை பிரித்தெடுக்க முடியுமா ஆகியவை குறித்து நிலவில் அடுத்தடுத்து ஆய்வு செய்யப்படும்.

 

தென் துருவத்தில் உள்ள சில பகுதிகள் 200 பூமி நாட்கள் வரை சூரிய ஒளியைப் பெறுகின்றன. எனவே சூரிய சக்தியின் நிலையான விநியோகம் எதிர்காலத்தில் நிலவில் சோலார் பேனல் மற்றும் மின் சாதனங்களை அமைக்க உதவும். தென் துருவத்தில் மிகப்பெரிய பள்ளமான எய்ட்கன் பேசின் பகுதியில், கனிம பொருட்கள் இருக்கலாம். இதெல்லாம் எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்ய உதவும் திட்டங்கள்.

சந்திரயான் 3 : விக்ரம் லேண்டரில் இருந்து நிலவில் கால்பதித்த ரோவர்.. இஸ்ரோ சொன்ன முக்கிய தகவல்..

சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் கடைசி நிமிடங்களில் தொடர்பை இழந்ததால் அத்திட்டம் பாதி தோல்வி அடைந்ததாக கருதப்பட்டது. ஆனால் முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். ஆனால் சந்திரயான் 2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து, இந்தியா கூடுதல் கவனத்துடன் இருந்தது. இதனால் பதைபதைக்க வைக்கும் கடைசி 15 நிமிடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

54 பெண் பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சந்திரயான் 3 திட்டத்தில் நேரடியாக பணியாற்றி உள்ளனர். துணை திட்ட இயக்குனர், பல்வேறு அமைப்புகளின் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் பணியாற்றி உள்ளனர்.

 

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து இந்த வரலாற்று தருணத்தை நேரில் பார்த்த மோடி, "இது ஒரு வரலாற்று இயக்கம் மற்றும் ஒரு வளர்ந்த இந்தியாவுக்கான துளியை ஒலிக்கிறது" என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்தியா, சந்திரயான் 3 லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கிய பிறகு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்களும், விஞ்ஞானிகளும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios