மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்குதேசகட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் முந்தைய மற்றும் தற்போதைய மத்திய அரசுகள் இதனை நிறைவேற்றவில்லை. இதற்கு எதிராக ஆந்திரா அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றன. ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதியை மீறிய மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது. 

இதற்காக பல்வேறு கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ்-பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறது தெலுங்குதேசம். தற்போது தெலுங்குதேசம் எம்.பி. சீனிவாஸ் கேசினேனி மக்களவை பொதுச்செயலருக்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.சீனிவாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.

செயலாளரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளையே இத்தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெலுங்குதேசம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவை தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.