PMGKAY: இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.45 ஆயிரம் கோடி செலவாகும்.
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.45 ஆயிரம் கோடி செலவாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது காந்தி அல்ல வத்ரா: பிரியங்கா தலைவராகலாமே! காங்கிரஸ் எம்.பி. புதிய யோசனை
அடுத்துவரும் பண்டிகைக்காலம், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் ஆகிவற்றை கருத்தில்கொண்டு இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில் “ கொரோனா முதல் அலை 2020ம் ஆண்டு ஏற்பட்டபோது, ஏப்ரல் மாதம் பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்… யார் இவர்?
இந்த திட்டம் கொரோனா காலம் முடிந்தபின்பும், மக்களின் நலன் கருதி தொடர்ந்து மத்திய அரசு நீட்டித்து வருகிறது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அ ரசு உணவு மானியத்துக்கு ஒதுக்கிய தொகையைவிட, கரீப் கல்யான் திட்டத்தை நீட்டித்துள்ளதால் அரசுக்கு கூடுதலாக ரூ.44,762 கோடி செலவாகும். இந்த கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்துக்கான ஒட்டுமொத்த செலவு ரூ.3.90 லட்சம் கோடியாகும்” என்று தெரிவித்தார்
பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனாவில், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதன்படி 12.20 மில்லியன் டன் உணவு தானியம் மக்களுக்கு வழங்கப்படும்.
கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.
மத்திய அரசின் உணவுதானியக் கையிருப்பில் கோதுமையின் அளவு குறைந்து வரும் நிலையில், கரீப் கல்யான் திட்டத்தை நீட்டித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்தத் திட்டத்தை நீட்டிக்க மத்திய நிதிஅமைச்சகம் முதலில் மறுப்புத் தெரிவித்தது.
செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி அரசின் கையிருப்பில் 60.10மெட்ரிக் டன் உணவு தானியம் இருக்கிறது, இதில் 10.82மெட்ரிக் டன் நெல் உள்ளது. தற்போது நெல்கொள்முதல் சீசன் வரும் அக்டோபர் முதல் தொடங்கஉள்ளது, இந்த சீசனில் அரசு 51.80 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
கரீப் கல்யான் திட்டம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசுக்கு, தன்னிடம் இருக்கும் உணவு தானியத்தின் அளவு எவ்வளவு என்பதை கணக்கீடு செய்ய ஏதாவாக இருக்கும். அதன்பின்புதான் மற்ற திட்டங்களை நீட்டிப்பு செய்வது குறித்து திட்டமிடலாம்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் உணவு மானியத்துக்காக மத்திய அரசு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கரீப் கல்யான் திட்டத்தை ஏப்ரல் வரை நீட்டித்ததால் கூடுதலாக ரூ.85,838 கோடியும், தற்போது டிசம்பர் வரை நீட்டித்துள்ளதால் கூடுதலாக ரூ.44,762 கோடியும் செலவாகும். ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் மட்டும் உணவு மானியத்துக்காக ரூ.3.38 லட்சம் கோடி செலவாகும்.