priyanka gandhi:congress: இப்போது காந்தி அல்ல வத்ரா: பிரியங்கா தலைவராகலாமே! காங்கிரஸ் எம்.பி. புதிய யோசனை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்வரமாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவர் வத்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராகலாம் என்று காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்வரமாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவர் வத்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராகலாம் என்று காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதிவரை வேட்புமனுத் தாக்கலும், அக்டோபர் 1ம் தேதி வேட்புமனு பரிசீலனையும் நடக்கிறது, அக்டோபர் 8ம்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதியாகும்.
இதுவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் மட்டுமே போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக பல்வேறு தரப்பு தலைவர்களும் முயற்சி செய்தனர். ஆனால், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடமாட்டார்கள் என்று ராகுல் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதனால் காந்தி குடும்பத்தைச் சாராத அதேசமயம், காந்தி குடும்பத்துக்கு விஸ்வாசம் மிக்கவராக ஒருவரைத் காங்கிரஸ் மேலிடம் தேடி வருகிறது. அசோக் கெலாட்டுக்கு தலைவர் வாய்ப்பு இருந்தநிலையில் ராஜஸ்தான் அரசியலில் அவரின் அரசியல் விளையாட்டால் அவர் பெயர் பரிசீலனையில் இருந்து பின் கைவிடப்பட்டது.
பிஎப்ஐ, துணை அமைப்புகளின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
இதனால் சோனியா காந்திக்கு அடுத்தார்போல் யாரைத் தலைவர் பதவிக்கு நிற்கவைக்க தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, திக்விஜய் சிங், சுஷில் குமார் ஷிண்டே, குமாரி செல்ஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பெயர் அடிபடுகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக பர்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் புதிய யோசனையைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் தலைவராக மீண்டும் வருவதற்கு ராகுல் காந்தி மறுத்துவிட்டார். பிரியங்கா காந்தி சிறந்த வேட்பாளர் என நான் கருதுகிறேன். இந்திய பாரம்பரியத்தின்படி, பிரியங்கா இப்போது வத்ரா குடும்பத்தின் மருமகள். காந்தி குடும்பத்தின் உறுப்பினர் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரியங்கா காந்தியின் பெயரை தலைவர் பதவிக்கு பரிசீலிக்க எந்தத் தலைவரும் முன்மொழியாதபோது அப்துல் காலிக் யோசனை சிந்திக்க வைத்துள்ளது.