CBSE Class 10, 12 Board Exams: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு தேதி அட்டவணை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வரும் நாட்களில் இது போன்ற சூழலை தவிர்க்க, இரண்டு பருவங்களாக பொதுத் தேர்வை நடத்து முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது. எனவே, புதிய நடைமுறையின்படி பொதுத் தேர்வு இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டது. 

Scroll to load tweet…

இரண்டு பருவ தேர்வுகளிலும் பாடத்திட்டம் 50 சதவீதமாக பிரிக்கப்பட்டு, அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மேலும் ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இந்த தேர்வானது சுமார் 3 மணி நேரம் நடைபெறும். 

மேலும் படிக்க: CBSE Class 10, 12 Board Exams: மாணவர்கள் கவனத்திற்கு..! சிபிஎஸ்இ 2 ஆம் பருவ தேர்வு தேதி அறிவிப்பு .

மேலும் புதிய தேர்விற்கான மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. 

Scroll to load tweet…

இந்த நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதுக்குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே இன்று சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு இரண்டாம் பருவ பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல் மே 24வரை நடைபெறும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: CBSE Term 1 Result: மாணவர்களே அலர்ட்..சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முதல்பருவ தேர்வு முடிவு இன்று மாலை வெளியீடு..?