CBSE Term 1 Result 2021 live Updates: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக பாடங்கள் எடுக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தின் படி பயிலும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ இறுதி தேர்வு இரண்டு பருவங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிபிஎஸ்இ யின் 10வது மற்றும் 12வது பருவம் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ஆப்லைன் முறையில் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேர்வு தொடங்கி நடைபெற்றது. சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி நடந்தது.
இதனிடையே சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நேரத்தில், எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முதல்பருவ தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Digilocker செயலி மற்றும் digilocker.gov.in ஆகியவற்றிலும் சிபிஎஸ்இ பருவ 1 முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் விரைவில் சிபிஎஸ்இ முடிவை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
