CBSE Class 10, 12 Board Exams: சிபிஎஸ்இ 2வது பருவத் தேர்வுகள் ஏப்ரம் 26 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் பருவ முடிவுக்குப் பிறகு, 2-வது பருவம் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ இறுதி தேர்வு இரண்டு பருவங்களாக பிரித்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ யின் 10வது மற்றும் 12வது பருவம் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ஆப்லைன் முறையில் நடைபெற்றது.இதனிடையே சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நேரத்தில், எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்தான எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல்பருவ தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Digilocker செயலி மற்றும் digilocker.gov.in ஆகியவற்றிலும் சிபிஎஸ்இ பருவ 1 முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் விரைவில் சிபிஎஸ்இ முடிவை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 2வது பருவத் தேர்வுகள் ஏப்ரம் 26 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் பருவ முடிவுக்குப் பிறகு, 2-வது பருவம் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.