தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக, பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகையாக உள்ள இவர் மாடிலிங்காகவும் இருந்து வருகிறார்.

தமிழில் இவர் நடித்த காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நியூயார்க் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது புற்றுநோய் குறித்து சோனாலி பிந்த்ரேவே, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.