2500 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த கொள்கைகள் இன்றும் பொருத்தமானவை; மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கருத்து

புத்த மதக் கொள்கைகளை உலகிற்கு கொண்டு செல்வது நாட்டின் பொறுப்பு என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்

Buddhist principles from 2500 years ago are still relevant today; Union Minister Meenakshi Lekhi comments

இந்தியா புத்த மதக் கொள்கைகளின் மையமாக மட்டுமல்லாமல் கலை மற்றும் கலாச்சாரத்தின் மையமாகவும் உள்ளது, எனவே புத்த மதக் கொள்கைகளை உலகிற்கு கொண்டு செல்வது நாட்டின் பொறுப்பு என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதித்தது இன்றும் பொருத்தமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ சித்தார்த்த கௌதம புத்தர் லும்பினியில் பிறந்தார், அவருடைய தரிசனம் புத்தகயாவில் இருந்தது. தற்போது இந்த இரண்டு பகுதிகளும் நேபாளத்தில் உள்ளன. எனவே இந்தியா நேபாளத்துடன் தொடர்புடையது. இந்தியா புத்த மதக் கொள்கைகளின் மையமாக மட்டுமல்லாமல் கலை மற்றும் கலாச்சாரத்தின் மையமாகவும் உள்ளது, எனவே புத்த மதக் கொள்கைகளை உலகிற்கு கொண்டு செல்வது நாட்டின் பொறுப்பு” என்று கூறினார்.

இதையும் படிங்க : டோங்கோவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவு

டெல்லியில் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'புத்த சரணம் கச்சாமி' கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக ட்ரெபுங் கோமுங் ஆசிரமத்தைச் சேர்ந்த குண்டெலிங் தட்சாக் ரின்போச் கலந்து கொண்டார். சக மனிதர்களை கருணையுடன் நடத்துவதற்கு பௌத்த கொள்கைகளை அனைவரும் பின்பற்றுவது நல்லது என்று அவர் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள நவீன கலைகளின் தேசிய கலையரங்கில் மூத்த புத்த துறவிகள் முன்னிலையில் நேற்று இந்த கண்காட்சி தொடங்கப்பட்டது. புத்தரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் புத்த கலாசாரத்தின் கலைப் பயணத்தை இந்தக் கண்காட்சி விளக்குகிறது. கண்காட்சியில் புத்த சிந்தனை மற்றும் வரலாறு பற்றி பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய அச்சுறுத்தல் : வாட்ஸ் அப்-ல் தொடர்ந்து வரும் வெளிநாட்டு அழைப்புகள்.. பீதியில் சென்னை மக்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios