டோங்கோவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவு

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள டோங்கோ நாட்டில் ரிக்டர் அளவில் 7.6 வரை பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7.6-magnitude quake rattles Pacific island nation of Tonga, no tsunami warning issued

பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவுக்கூட்டமான டோங்காவில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 20 முதல் 30 வினாடிகள் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் டோங்காவில் உள்ள ஹிஹிஃபோ கிராமத்தில் இருந்து 73 கிமீ தொலைவில் வடமேற்கு திசையில் 212 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஹிஃபோ கிராமம் வடக்கு டாங்கோவின் நியுடோபுடாபு தீவில் உள்ளது.

உருவானது மொக்கா புயல்! 14ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக அதிகாலை 4.30 மணியளவில் டோங்காவின் மோவா, வாலிஸ், ஃபுடுனா தீவுகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதற்கு முன் கடந்த ஜனவரி 14ஆம் தேதி டோங்காவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டோங்கா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம், நியாஃபு நகரின் தென்கிழக்கில் இருந்து கிழக்கே சுமார் 128.6 மைல் தொலைவில் 15.4 மைல் ஆழத்தில் ஏற்பட்டது.

ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தின் கிசராசு நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்தும் சுனாமி அபாய எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை.

கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios