Karnataka Election: கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்
கர்நாடக மாநிலத்தில் முன்னதாரணமான வகையில், பல திருமணத் தம்பதிகள் மணக்கோலத்திலேயே வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆனால், நகரப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பலர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துவிட்டனர் என்றும் இதனால் நகரப் பகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த அளவே பதிவாகியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, வாக்காளிக்காத நபர்களுக்கு முன்னதாரணமாக பலர் தங்கள் சிரமங்களைக் கடந்து வாக்களிக்க வந்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்கள், தேர்தலுக்காகவே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், புதுமணத் தம்பதிகள் என பலர் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆர்வத்துடன் ஜனநாயகக் கடமையைச் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் திருமணத் தம்பதிகள் மணக்கோலத்திலேயே வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் உள்ள வாக்குச்சாவடியில் பிபின் - அக்ஷதா தம்பதி வாக்களித்தனர். பிபினின் தந்தை நாகேந்திரா, தாய் கீதா உள்பட அவர்களது உறவினர்களும் உடன் வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். பெங்களூருவில் யஷ்வந்தபுரா தொகுதியில் உள்ள நாகதேவனஹள்ளியில் வாக்குச்சாவடியில் கிரண்-ஹர்ஷிதா தம்பதி தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
Watch: வாக்குச்சாவடி முன்பு பிறந்தநாள் கொண்டாடிய பாஜக வேட்பாளர்!
சிக்கமகளூரு மாவட்டத்தின் மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட மாகோனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணப்பெண் முன்னமதுமா வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வந்து வாக்குப்பதிவு செய்துவிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றார்.
உடுப்பி மாவட்டம் காபுவில் ஒரு கிறிஸ்தவ பெண் மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார். பீதர் டவுன் பழைய நவதாகி பகுதியில் வாக்களிக்க வந்த மணமகன் ஒருவர் மணக்கோலத்தில் குடும்பத்துடன் வந்திருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், கர்நாடகாவின் கோலாரில் உள்ள முல்பகலில் புதுமணத் தம்பதிகள் தங்கள் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் மே 10ஆம் தேதி தேர்தலில் வாக்களித்துவிட்டு திருமணத்துக்கு வருமாறு அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட 600 பேருக்கு இந்த வேண்டுகோளுடன் திருமண அழைப்பிதழ்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
Karnataka Elections: கர்நாடகாவில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்