Asianet News TamilAsianet News Tamil

புதிய அச்சுறுத்தல் : வாட்ஸ் அப்-ல் தொடர்ந்து வரும் வெளிநாட்டு அழைப்புகள்.. பீதியில் சென்னை மக்கள்

வாட்ஸ் அப்-ல் வெளிநாட்டு நம்பரில் இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதால் சென்னை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

New threat: WhatsApp calls from abroad to the people of Chennai.. What is the reason?
Author
First Published May 11, 2023, 10:02 AM IST

இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே நம்பி உள்ளனர். இண்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங், யுபிஐ போன்ற வழிகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நம் வேலையை எளிதாக்கி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான பணத்தை திருடி வருகின்றனர்.

இமெயில் மோசடி, எஸ்.எம்.எஸ். மோசடி, பகுதிநேர வேலை மோசடி, என பல நூதன வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு அழைப்பு மோசடி புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் சென்னை மக்களுக்கு வெளிநாட்டு அழைப்புகள் அடிக்கடி வருகின்றன. இந்த அழைப்பு பெரும்பாலும் பிளாங்க் அழைப்புகளாக வருகின்றன. இதனால் சென்னை மக்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க : உருவானது மொக்கா புயல்! 14ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியட்நாம், மொராக்கோ, மாலி, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கோவிலம்பாக்கத்தை சேர்ந்த துரைராஜ் இதுகுறித்து பேசிய போது “ ஓரிரு அழைப்புகள் மட்டும் வரவில்லை. இடைவெளி இன்றி தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. எனினும் அழைப்புக்கு பதிலளித்தால் மறுமுனையில் யாரும் பேசுவதில்லை..” என்று தெரிவித்தனர்.

 

இதே போல் பலரும் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவில் “ நான் தொடர்ந்து தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் அப்-ல் அழைப்புகளை பெற்று வருகிறேன். உலகின் பல பகுதிகளில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. நான் எனது ஃபோனை சைலண்ட் மோடிலேயே வைத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து எந்த புகாரையும் பெறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இதுபோன்ற அழைப்புகளுக்கு பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாக புரியவில்லை.” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மற்ற மாநிலங்களில் காவல்துறையினர் இதுகுறித்து எச்சரித்துள்ளனர். இதுபோன்று வெளிநாடுகளில் இருந்து தெரியாத எண்ணில் அழைப்புகள் வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதே போல் வாட்ஸ் அப் நிறுவனமும் இதேபோன்ற மோசடி நடவடிக்கையை தடுக்க ஸ்பேம் டிடெக்‌ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க : மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கட்! போனஸ் பட்ஜெட்டும் குறைப்பு

 

Follow Us:
Download App:
  • android
  • ios